என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்
நீங்கள் தேடியது "ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்"
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
புதுடெல்லி:
ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பிருந்து இறை வழிபாட்டில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தான - தர்மங்களின் மூலம் ரம்ஜான் பண்டிகைக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் பன்முகத்தன்மை கொண்ட நாட்டு மக்களிடையே சகோதரத்துவம் நிலவட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈதுல் பித்ர் என்னும் இந்த சிறப்புக்குரிய விழாவின்போது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக, இந்தியாவிலும், கடல்கடந்தும் வாழும் நமது இஸ்லாமிய சகோதர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பகிரப்பட்ட நமது சமுதாயத்தில் நல்ல புரிதல்களையும், சகோதரத்துவத்தையும் இந்த ரம்ஜான் பண்டிகை மேம்படுத்தட்டும் என அவர் தெரிவித்துள்ளார். #PresidentEidgreetings #Eid #Ramnathgovind
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சைவ விருந்தளித்து உபசரித்தார். #VenkaiahNaiduhostsPresident
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சைவ விருந்தளித்து உபசரித்தார்.
இதுதொடர்பாக, புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு, ‘ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தார் எனது வீட்டில் விருந்துண்டதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #VenkaiahNaiduhostsPresident
பின் தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு செயலாற்ற வேண்டும் என கவர்னர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆலோசனை வழங்கினார். #PresidentKovind #GovernorsConference
புதுடெல்லி:
மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 49-வது மாநாடு இன்று ஜனாதிபதி மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடக்க உரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-
மாநில அரசுக்கு வழிகாட்டியாகவும், மத்திய அரசுடன் முக்கியமான பாலமாகவும் கவர்னர்கள் விளங்குகிறார்கள். சிந்தனைகள் மற்றும் மதிப்புகளின் ஊற்றுக்கண்களாக கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும் பொதுமக்கள் பார்க்கிறார்கள்.
நாட்டில் உள்ள சுமார் 100 மில்லியன் மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். நமது வளர்ச்சிப் பயணத்தில் எதிர்பார்த்த அளவிற்கு பயன் அடையாத சக குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு, மாநில ஆளுநர் என்ற முறையில் உதவி செய்ய வேண்டும்.
உலகிலேயே அதிக இளைஞர்கள் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அவர்களின் பாதுகாவலர்கள் நீங்கள். அவர்கள் சரியான ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதை நீங்கள் ஊக்கம் அளிக்கலாம். மேலும், நவீன கல்வியை தொடரவும் இந்திய கலாச்சாரத்தை தொடர்ந்து பின்பற்றவும் ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #PresidentKovind #GovernorsConference
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X