search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜான் இஸ்னர்"

    அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜான் இஸ்னர் 5-வது முறையாக அட்லாண்டா ஓபன் பட்டத்தை வென்றார். #AtlantaOpenTitle #JohnIsner
    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சக நாட்டு வீரர் ரையான் ஹாரிசனை சந்தித்தார். 2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜான் இஸ்னர் 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரையான் ஹாரிசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 33 வயதான ஜான் இஸ்னர் 5-வது முறையாக அட்லாண்டா ஓபன் பட்டத்தை வென்றார்.

    இதற்கு முன்பு 2013, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் இந்த பட்டத்தை வென்று இருந்தார். இதன் மூலம் ஜான் இஸ்னர் அட்லாண்டா ஓபன் பட்டத்தை 5 முறை வென்ற அமெரிக்க வீரர்கள் பட்டியலில் ஜிம்மி கானர்ஸ், ஜான் மெக்கன்ரோ, பீட் சாம்பிராஸ், ஆந்த்ரே அகாசி ஆகியோருடன் இணைந்தார்.
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். #Wimbledon2018 #JohnIsner #KevinAnderson
    விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

    முதலாவது அரையிறுதியில் 8-ம் நிலை வீரரான தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னரை எதிர்கொண்டார்.



    ஆண்டர்சன் முதல் செட்டை 7-6 என கைப்பற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது  செட்களை 6-7, 6-7 என ஜான் இஸ்னர் கைப்பற்றினார்.

    இறுதியில் நுழைய வேண்டிய கட்டாயத்தில் ஆண்டர்சன் சிறப்பாக ஆடினார். அதனால் நான்காவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஐந்தாவது சுற்று அவ்வளவு எளிதாக முடியவில்லை. ஆண்டர்சனும், இஸ்னரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்ட நேரம் கூடிக் கொண்டே போனது.
    கடைசியாக,  ஆண்டர்சன் 26-24 என்ற கணக்கில் இஸ்னரை தோற்கடித்து இறுதிப்போட்டியில் நுழைந்தார்.

    இறுதியில்,  ஆண்டர்சன் 7-6(6), 6-7(5), 6-7(9), 6-4, 26-24  என்ற செட்களில் இஸ்னரை வென்றார். இந்த அரையிறுதி போட்டி சுமார் ஆறரை மணி நேரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×