என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜார்கண்ட் ஐகோர்ட்
நீங்கள் தேடியது "ஜார்கண்ட் ஐகோர்ட்"
முன்ஜாமின் கேட்டு மனு செய்த மூன்று பேரின் டெபாசிட் தொகையை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வேண்டும் என ஜார்கண்ட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #KeralaCMReliefFund #JharkhandHC
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தில் மோசடி வழக்குகளில் தொடர்புடைய மூன்று நபர்கள் தங்களுக்கு முன்ஜாமின் கோரி ஜார்கண்ட ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். உரிய கட்டணத்துடன் அந்த மனுக்களை ஏற்று பரிசீலித்த நீதிபதி ஏ.பி.சிங் வித்தியாசமான முறையில் நேற்று உத்தரவிட்டார்.
முன்ஜாமின் பெறுவதற்கான முன்வைப்பு (டெபாசிட்) தொகையான 7 ஆயிரம் ரூபாயை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை காட்டி முன்ஜாமின் உத்தரவுக்கான கோர்ட்டின் நகலை பெற்று செல்லலாம் என தனது உத்தரவில் நீதிபதி ஏ.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக முன்ஜாமினுக்கு செலுத்தப்படும் தொகையை ஜாமின் காலம் முடிந்த பின்னர் செலுத்திய நபர்கள் பெற்று செல்லலாம். ஆனால், முதல் மந்திரியின் நிவாரண நிதிக்கு செலுத்திய பின்னர் அந்த தொகை மாநில அரசுக்கு வந்த நன்கொடை கணக்கில் சேர்ந்துவிடும். எனவே, பணத்தை செலுத்திய நபர் மீண்டும் அந்த தொகையை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaCMReliefFund #JharkhandHC

×

X