search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜீரோ எஸ்.ஆர். எஃப்."

    ஜீரோ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதில் மோட்டார்சைக்கிளின் விவரங்கள் தெரியவந்துள்ளது. #Electric Motorcycle



    சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத பேட்டரியில் இயங்கும் மோட்டார்சைக்கிளை கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளின் பெயர் ஜீரோ. அதாவது எரிபொருளாக பெட்ரோல் தேவையில்லை, புகை கக்காது.

    இதனாலேயே இதற்கு ஜீரோ மோட்டார் சைக்கிள் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பேட்டரி மோட்டார்சைக்கிளில் புரட்சியை இது ஏற்படுத்தும் என்று நிறுவனம் உறுதிபடக் கூறியுள்ளது.

    ஜீரோ எஸ்.ஆர்.எப். என இதற்கு பெயரிட்டுள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் இது 35 சதவீதம் கூடுதல் சக்திகொண்டது. ஸ்டைலான வடிவமைப்பு, கண்ணைக் கவரும் நிறம் ஆகியவற்றுடன் பலவித பேட்டரி ஆப்ஷன்களைக் கொண்டதாக இது அறிமுகமாகிறது.



    உயர் திறன் கொண்ட பேட்டரி மாடல் மற்ற மாடல் மோட்டார்சைக்கிள்களை விட 50 கிலோ வரை எடை கூடுதலாகக் கொண்டிருக்கும். ஏற்கனவே உள்ள ஜீரோ எஸ்.ஆர். மாடலில் பேட்டரி அதன் பெட்ரோல் டேங்க் வடிவிலான முன்பகுதியில் உள்ளது. இந்த பேட்டரி திறனை 3.6 கிலோவாட் வரை அதிகரிக்க முடியும்.

    இது 70 ஹெச்.பி. திறனை வெளியிடுவதோடு 157 என்.எம். டார்க் திறனை வெளியிடக் கூடியது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 359 கி.மீ. தூரம் வரை செல்லும். பிப்ரவரி 25 ஆம் தேதி அமெரிக்காவில் அறிமுகமாக இருக்கும் இந்த மோட்டார் சைக்கிள் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×