என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஜெப்ரானிக்ஸ் ஆட்டம்
நீங்கள் தேடியது "ஜெப்ரானிக்ஸ் ஆட்டம்"
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகம் செய்திருக்கும் ஆட்டம் வயர்லெஸ் ஸ்பீக்கர் விமர்சனம். #ATOM #bluetoothspeaker
வயர்லெஸ் ஸ்பீக்கர் சாதனங்கள் சமீப காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. வயர்லெஸ் ஆடியோ சாதனங்களில் ஹோம் தியேட்டர் சிஸ்டம்களும் கிடைக்கின்றன. வயர்லெஸ் ஸ்பீக்கர்களை செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே எடுத்துச் செல்லலாம் என்பதால் இவை அதிக பிரபலமாகி வருகின்றன.
அதிக பிரபலமாகி வருவதால் பல்வேறு நிறுவனங்களும் வயர்லெஸ் ஆடியோ சாதனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. அந்த வரிசையில் ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரை அறிமுகம் செய்திருக்கிறது.
ஆட்டம் (Atom) என அழைக்கப்படும் புதிய வயர்லெஸ் ஸ்பீக்கரின் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிம்னி விளக்கு தோற்றம் கொண்டிருக்கும் புதிய ஆட்டம் ஸ்பீக்கர் விமர்சனத்தை தொடர்ந்து பார்ப்போம்.
அழகிய தோற்றம்:
ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கர் பார்க்க சிம்னி விளக்கு போன்ற தோற்றம் மற்றும் அனுபவத்தை வழங்குகிறது. முட்டை வடிவம் கொண்ட வடிவமைப்பு சிம்னி விளக்கை நினைவூட்டுகிறது. ஸ்பீக்கரில் 60 எல்.இ.டி. விளக்குகள் வழங்கப்பட்டு இருப்பதால், மின்விளக்கு உண்மையான தீ எரிவது போன்ற அனுபவத்தை வழங்குகிறது.
பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர் கருப்பு நிறம் மற்றும் ஸ்பீக்கர் முழுக்க சீரான கிரில் கொண்டிருக்கிறது. ஸ்பீக்கர் கிரில் மின்விளக்கின் கீழ் பகுதியில் காணப்படுகிறது. ஸ்பீக்கரின் பின்புறம் ரப்பர் ஸ்டிராப் வழங்கப்பட்டுள்ளது. இதை திறந்ததும், மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. முன்பக்கம் வால்யூம் கன்ட்ரோல்கள் மற்றும் மின்விளக்கை ஆன், ஆஃப் செய்யும் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்டன்களும் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்டுள்ளது. இவற்றை தொடும் போது பிளாஸ்டிக் உணர்வு ஏற்படுகிறது. 340 கிராம் எடை கொண்டிருக்கும் ஸ்பீக்கர் மெல்லியதாகவும், எடை குறைவாகவும் இருக்கிறது. இதனை ஸ்பீக்கர் மட்டுமின்றி படுக்கையறை மின்விளக்ககாகவும் பயன்படுத்தலாம்.
எளிய கனெக்டிவிட்டி:
மற்ற ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்றே, ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ஸ்பீக்கரை ஸ்மார்ட்போனுடன் மிக சுலபமாக இணைக்க முடியும். இதில் ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும், பின் ஸ்பீக்கரில் உள்ள பவர் பட்டனை அழுத்தி பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் பட்டன்களில் சிறிய மின்விளக்குகள் தொடர்ச்சியாக ஆன், ஆஃப் ஆகும். இனி ஸ்மார்ட்போனில் ZEB-ATOM என்ற ப்ளூடூத் ஆப்ஷன் தெரியும்.
ஆடியோ தரம்:
ஆடியோ தரத்தை பொறுத்த வரை, ஜெப்ரானிக்ஸ் ஸ்பீக்கர் தெளிவான மற்றும் அதிக சத்தமாக இருக்கிறது. எனினும் முழு சத்தத்தை வைக்கும் போது மெல்லிய இரைச்சல் ஏற்படுகிறது. ஸ்பீக்கரில் பேஸ் இல்லை என்பதால், ஆடியோ தரம் மிக உயர்ந்த ரகங்களில் இருக்கும் உணர்வு ஏற்படவில்லை. மற்றப்படி ஸ்பீக்கரை இயக்குவது எளிமையாக இருக்கிறது. வால்யூப் அப் மற்றும் டவுன் பட்டன்களை அழுத்திப்பிடித்தால், வால்யூம் அதிகரிக்கவும், குறையவும் செய்யும்.
ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கரின் லைட்னிங் மென்மையாக இருக்கிறது. இதனால் இதனை படுக்கையறை மின்விளக்கிற்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம். பேட்டரி பேக்கப் நேரத்தை பொறுத்த வரை மின்விளக்கு எரியும் போதும் நீண்ட நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. ஸ்பீக்கர் கொண்டு தொடர்ச்சியாக திரைப்படம் மற்றும் பாடல் உள்ளிட்டவற்றை இடைவெளியின்றி பயன்படுத்தலாம்.
பயன்பாடு:
படுக்கையறையை அழகாக்கும் மின்விளக்கு மற்றும் ஸ்பீக்கர் என இருவித பயன்பாடுகளை ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ஸ்பீக்கர் வழங்குகிறது. மேலும் ப்ளூடூத் மட்டுமின்றி மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டு இருப்பதால், மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலமாகவும் பாடல்களை கேட்டு ரசிக்கலாம். எனினும் இதில் எஃப்.எம். ரேடியோ வசதி வழங்கப்படவில்லை.
பண்டிகை கால ஸ்பீக்கர் என்ற வகையில் இதன் ஆடியோ தரம் மேம்பட்டு இருக்கலாம், எனினும் கொடுக்கும் விலையில் இதமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. மொத்தத்தில் இயல்பான பயன்பாட்டிற்கு ஏற்ற சுவாரஸ்ய சாதனமாக ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ஸ்பீக்கர் இருக்கிறது.
இந்தியாவில் ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் விலை ரூ.1,699 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஜெப்ரானிக்ஸ் ஆட்டம் ப்ளூடூத் ஸ்பீக்கரின் அன்பாக்சிங் வீடியோவை கீழே காணலாம்..,
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X