search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக் கடை சிறுவர்கள்"

    டாஸ்மாக் கடைகளில் சிறுவர்களுக்கு மது விற்பதை கண்காணிக்க 3 ஆயிரம் கடைகளில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. #Tasmac

    சென்னை:

    மதுக்கடைகளில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற விதி உள்ளது.

    இருப்பினும் சிறுவர்களுக்கும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதனால் இளம் தலைமுறைகள் மதுவுக்கு அடிமையாகி கெட்டுப் போகிறார்கள் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் கூறுகிறார்கள்.

    இதையடுத்து டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனையை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 3 ஆயிரம் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

     


    ஒரு கடைக்கு 2 கேமராக்கள் வீதம் 6 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

    இதன் மூலம் விற்பனையை ஒழுங்குப்படுத்துதல், போலி மதுபானங்கள் விற்பனை தடுத்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த கேமராக்கள் பொருத்த ரூ.5 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    மாவட்ட அளவில் 38 இடங்களிலும், மண்டல அளவில் 5 இடங்களிலும் கண்காணிப்பு அறைகளும் அமைக்கப்படுகிறது.

    அடுத்த மாதம் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு 4 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர். #Tasmac

    ×