என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டி பிளாக்"
- நடிகர் அருள்நிதியின் 15-வது படமான டி-பிளாக் திரைப்படத்தின் புதிய அறிவிப்பு.
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது வலைத்தளப் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.
'வம்சம்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து 'மௌனகுரு', 'டிமாண்டி காலனி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'பிருந்தாவனம்', 'கே-13' என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
அதன்பின் நடிகர் அருள்நிதி அவருடைய 15-வது படத்தை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கினார். டி-பிளாக் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வெளியிட உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "ஐஸ் கட்டி குருவி" என்ற வீடியோ பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை (14.06.2022) மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக அருள்நிதி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
#Prince @Sivakarthikeyan bro to Launch the enthralling video song from #Dblock at 5pm tomorrow #DBlock release on July1
— Arulnithi tamilarasu (@arulnithitamil) June 13, 2022
A @SakthiFilmFctry Release ❤️
@VijayKRajendran@sakthivelan_b @MNM_Films @AravinndSingh @Avantika_mish @thecutsmaker @RonYohann pic.twitter.com/M0jz7mASuZ