search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெலிகாம் சேவை"

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டர் சேவைகள் துவங்கப்பட்டது. இதற்கென பி.எஸ்.என்.எல். நிறுவனம் இரண்டு நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது. #BSNL #telecom



    ஆட்பே மொபைல் பேமென்ட் இந்தியா மற்றும் ப்ளின்ட்ரான் இந்தியா என இரண்டு விர்ச்சுவல் நெட்வொர்க் ஆப்பரேட்டர்களுடன் இணைந்து பி.எஸ்.என்.எல். நிறுவன விர்ச்சுவல் நெட்வொர்க் சேவை துவங்கப்பட்டு இருக்கிறது.

    இரண்டு விர்ச்சுவல் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் தங்களது சிஸ்டம்களை பி.எஸ்.என்.எல். மொபைல் உள்கட்டமைப்புகளில் இணைத்து பயனர்களுக்கு சேவையை வழங்க இருப்பதாக பி.எஸ்.என்.எல். வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆட்பே நிறுவனம் ஏரோவாய்ஸ் என்ற பிரான்டு பெயரில் இயங்குகிறது. இதன் மூலம் ஊரக பகுதிகளை டிஜிட்டல் முறையில் இணைக்க முடியும். அந்த வகையில் ஏரோவாய்ஸ் சிம் (வாய்ஸ் மற்றும் டேட்டா சேவை மட்டும்) மற்றும் ஐ.எஸ்.பி. (இன்டர்நெட் சேவை) சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ப்ளின்ட்ரான் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சார்ந்த சேவைகளை eSIM4Things என்ற பிரான்டு மூலம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பி.எஸ்.என்.எல். நிறுவனம் E&Y நிறுவனத்துடன் இணைந்து ரோபோடிக் பிராசஸ் ஆட்டோமேஷனை அறிவித்துள்ளது.

    இதன் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பணிகளை குறைந்த கட்டணத்தில் மிகச்சிறப்பாகவும், துல்லியமாகவும் செய்து முடிக்க வழி செய்யலாம் என கூறப்படுகிறது.

    மே 2016-இல் மத்திய டெலிகாம் துறை வெளியிட்ட விதிமுறைகளின் கீழ் விர்ச்சுவல் நெட்வொர்க் சேவையை துவங்கியிருக்கும் முதல் நிறுவனம் பி.எஸ்.என்.எல். தான். அந்த வகையில் புதிய விர்ச்சுவல் நெட்வொர்க் சேவையை துவங்குவதில் பி.எஸ்.என்.எல். மகிழ்ச்சியடைகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #BSNL #telecom
    ×