என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டெல்லி மகளிர் ஆணையம்
நீங்கள் தேடியது "டெல்லி மகளிர் ஆணையம்"
உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட விதவை பெண் பல முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
மீரட்:
உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் கணவரின் மறைவுக்கு பின் அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்றனர்.
விதவை பெண்ணை ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கியவர் தனது நண்பர்கள் உள்பட பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி கொண்டு வீட்டு வேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைத்தார்.
வீட்டு வேலைக்கு சென்ற விதவை பெண்ணை அங்குள்ள கும்பல் கற்பழித்தது. பல முறை அவர் கற்பழிக்கப்பட்டு கடுமையான சித்ரவதை செய்யப்பட்டு உள்ளார்.
இந்த கற்பழிப்பு தொடர்பாக அந்த பெண் ஹாபூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் அவரது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டனர்.
இதனால் அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 80 சதவீத தீக்காயங்களுடன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக டெல்லி மகளிர்ஆணையம் அளித்த புகாரின் பேரில் ஹாபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார். 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

நிர்பயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை நிறைவேற்றாதது ஏன்? என திகார் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு டெல்லி பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #NirbhayaMurderCase #DCW
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அந்த பெண் 13 நாள்கள் மருத்துவமனையில் இருந்து, பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட 6 பேரில் ஒருவர் தாமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார். முகேஷ், வினய் உள்பட மற்ற 4 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.
டெல்லி நீதிமன்றம் விதித்த தூக்குதண்டனையை எதிர்த்து 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். குற்றவாளிகளில் ஒருவர் மேல்முறையீடு செய்யவில்லை. அவர்களது மேல்முறையீட்டு மனுவில் தூக்கு தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அவர்களது மனுவை நிராகரித்து தூக்கு தண்டனையை கடந்த ஜூலை மாதம் உறுதி செய்தது. ஆனால், தற்போது வரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை விதிக்கப்படாதது ஏன்? என டெல்லி மகளிர் ஆணையம் திகார் சிறைத்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #NirbhayaMurderCase #DCW

×

X