என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டெல்லி முதல் மந்திரி
நீங்கள் தேடியது "டெல்லி முதல் மந்திரி"
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. #ArvindKejriwal
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவரது கட்சியின் சின்னம் துடைப்பம். டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இதனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை வேட்பாளர் ராகவ் சத்தா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், வீடு வீடாக சென்று பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது என பதிவிட்டு, வீடு ஒன்றின் வாசலில் பசு மற்றும் கன்று நிற்பது போன்ற புகைப்படத்தினையும் இணைத்து பதிவிட்டார். இதனை முதல் மந்திரி கெஜ்ரிவால் லைக் செய்துள்ளார்.
இந்த டுவிட்டர் பதிவு தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவது ஆகும். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் டெல்லி பா.ஜ.க. புகார் அளிக்கும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவினை வெளியிட்டு சர்ச்சை கிளப்பி உள்ளார். #ArvindKejriwal
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவரது கட்சியின் சின்னம் துடைப்பம். டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், மத சின்னத்தினை நபரொருவர் துடைப்பம் கொண்டு துரத்துவது போன்று ஓவியம் இடம்பெற்று இருந்தது.
இதனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை வேட்பாளர் ராகவ் சத்தா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், வீடு வீடாக சென்று பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது என பதிவிட்டு, வீடு ஒன்றின் வாசலில் பசு மற்றும் கன்று நிற்பது போன்ற புகைப்படத்தினையும் இணைத்து பதிவிட்டார். இதனை முதல் மந்திரி கெஜ்ரிவால் லைக் செய்துள்ளார்.
இதுபற்றி டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த விஜேந்தர் குப்தா கூறும்பொழுது, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம். பசு நல்லிணக்கத்தின் அடையாளம். இதனை ஆம் ஆத்மி அரசியலாக்குகின்றது. சமூகத்தில் பதற்றத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. இதுபற்றி ஆணையத்திடம் எடுத்து கூறுவோம் என கூறினார்.
இந்த நிலையில், மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவினை வெளியிட்டு சர்ச்சை கிளப்பி உள்ளார். #ArvindKejriwal
டெல்லியின் முக்கிய பகுதிகளை கண்காணிக்க சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில் நாளை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறுகிறது. #CCTVscam #congress #Kejriwal
புதுடெல்லி:
பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார்.
இந்நிலையில், சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில் மெழுகு வர்த்திகளை ஏந்தி ஊர்வலமாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நாளை நடைபெறுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நடைபெறும் இந்த போராட்டத்துக்கான அறிவிப்பை டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் ஹாரூன் யூசுப் இன்று மாலை வெளியிட்டனர்.
டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் தலமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் காங்கிரசார் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எங்களது குற்றச்சாட்டு பொய் என்றால் அரவிந்த் கெஜ்ரிவால் எங்கள்மீது மான நஷ்ட வழக்கு தொடரட்டும் எனவும் அவர்கள் சவால் விட்டுள்ளனர். #CCTVscam #congress #Kejriwal
×

X