என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டேல் ஸ்டெயின்"
தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஸ்டெயின் இன்னும் சிறந்த வகையில் குணமடையவில்லை. குணமடைவதற்கு இன்னும் வெகுதூரம் இல்லை. இருந்தாலும் தயாராகவில்லை.
உலகக்கோப்பை தொடர் ஆறுவாரக் காலம் நடைபெறுகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க தேவையில்லை. அவர் முதல் ஆட்டத்தில் இடம்பிடிக்க மாட்டார். நாங்கள் அவரைத்தவிர 14 வீரர்கள் பெற்றுள்ளோம். அதில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்வோம்’’ என்றார்.
தொடர் காயத்திற்குப்பின் சமீப காலமாக சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஆர்சிபி அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், கவுல்டர் நைல் விலகியதால் ஸ்டெயினை மாற்று வீரராக தேர்வு செய்தது ஆர்சிபி. அவர் கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடினார். இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
நேற்றைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடவில்லை. இந்நிலையில் தோள்பட்டையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஓய்வு தேவை என்பதால் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் அரங்கேறிய 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. பெங்களூரு அணியில் தோள்பட்டை வலியால் அவதிப்படும் ஸ்டெயினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சவுதி சேர்க்கப்பட்டார். இதே போல் பவான் நெகி நீக்கப்பட்டு இந்த சீசனில் முதல்முறையாக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார்.
‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான விராட் கோலி 3 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய கோலி 13 ரன்களில், முகமது ஷமி வீசிய ஷாட்பிட்ச் பந்தில் கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் பார்த்தீவ் பட்டேல் 43 ரன்களிலும் (24 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த மொயீன் அலி 4 ரன்னிலும், அக்ஷ்தீப் நாத் 3 ரன்னிலும் வெளியேறினர். அப்போது பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்கு 81 ரன்களுடன் திண்டாடியது. சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வினும், முருகன் அஸ்வினும் ரன்வேகத்துக்கு அணை போட்டனர்.
இதைத் தொடர்ந்து டிவில்லியர்சும், மார்கஸ் ஸ்டோனிசும் இணைந்து அவசரமின்றி விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 13.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. அதன் பிறகு ரன்ரேட்டை உயர்த்த அதிரடி வேட்டை நடத்தினர். இதனால் ஸ்கோர் மளமளவென எகிறியது. முகமது ஷமியின் ஓவரில் டிவில்லியர்ஸ் ‘ஹாட்ரிக்’ சிக்சர் விளாசி உள்ளூர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். வில்ஜோனின் இறுதி ஓவரில் இருவரும் இணைந்து 3 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியடித்தனர். இவர்களின் வாண வேடிக்கையால் ஸ்கோர் 200 ரன்களை தாண்டியது.
20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. தனது 33-வது அரைசதத்தை எட்டிய டிவில்லியர்ஸ் 82 ரன்களுடனும் (44 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 46 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 64 ரன்கள் திரட்டினர். தனது பந்து வீச்சில் பவுண்டரி, சிக்சர் எதுவும் அடிக்க விடாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 ஓவரில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். முருகன் அஸ்வின், முகமது ஷமி, வில்ஜோன் ஆகியோருக்கும் தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணியும் அதிரடியில் மிரட்டியது. கிறிஸ் கெய்ல் 23 ரன்களும் (10 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), மயங்க் அகர்வால் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 42 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு நிகோலஸ் பூரனும், டேவிட் மில்லரும் சிறிது நேரம் அச்சுறுத்தினர். 17-வது ஓவர் வரை (3 விக்கெட்டுக்கு 167 ரன்) பஞ்சாப் அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது.
ஆனால் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்து வீசிய பெங்களூரு பவுலர்கள் மேலும் 4 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினர். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கு 185 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மில்லர் 24 ரன்னிலும், பூரன் 46 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.
அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கும் பெங்களூரு அணிக்கு இது 4-வது வெற்றியாகும். பஞ்சாப் அணிக்கு 6-வது தோல்வியாகும்.
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 போட்டிகளில் விளையாடி ஆறிலும் தோல்வியைச் சந்தித்துள்ளன. அந்த அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான கவுல்டர்-நைல்-ஐ ஏலத்தில் எடுத்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடியதால் ஐபிஎல் தொடக்கத்தில் அவர் விளையாடவில்லை.
பின்னர் அணியில் இணைய இருந்த நேரத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயினை தேர்வு செய்துள்ளது.
கடந்த முன்றரை ஆண்டுகளில் காயத்தால் அவதிப்பட்ட ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணியில் தொடர்ச்சியான இடம்பெறாத நிலை ஏற்பட்டது. இதனால் மேலும் 21 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தி பொல்லாக்கின் சாதனையை சமன் செய்ய முடிந்தது.
நாளை தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடக்கிறது. இந்த போட்டியில் ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினாலே அதிக விக்கெட் வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையைப் பெறுவார்.
ஆனால், ஒரு விக்கெட் வீழ்த்தி பொல்லாக் சாதனையை முறியடிப்பது பெரிய விஷயம் அல்ல. அதைவிட அதிக அளவில் சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘நான் ஒரு விக்கெட் பெறுவதை விட அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்ற வேண்டும். பொல்லாக்கை விட ஒரு விக்கெட் அதிகமாக பெறுவதால் என்னை பாதுகாத்துக் கொள்ள முடியாது. பெரிய இலக்காக இருக்க வேண்டும்.
அதிக விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனை நடந்தால் மிக சிறப்பானதாக இருக்கும். இதுபோன்ற சாதனைகள் படைப்பது கவுரவம். இது எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுக்கும். ஆனால், சாதனையை முறியடித்த பிறகு, மேலும் ஒரு சாதனை படைக்க முயற்சி செய்வேன். இதுதான் எனது திட்டம்’’ என்றார்.
இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் களம் இறங்கினார். ஆனால் காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. சமீபத்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும்போதும் கூட காயத்தில் அவதிப்பட்டார்.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயின் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் சுமார் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் அணியில் விளையாடுகிறார்.
பந்து சேதப்படுத்திய குற்றத்திற்காக ஐசிசி ஒரு டெஸ்டில் விளையாட தடையும், அபாரதமும் விதித்தது. ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் தடைவிதித்தது. பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடைவித்தது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தண்டனையை பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விரும்பவில்லை. இது மிகப்பெரிய தண்டனை என்று குறிப்பிட்டனர்.
இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும் நிலையில் பால் டேம்பரிங் விவகாரம் உதவிக்காக அழுவது என்று தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘கேப்டவுன் டெஸ்டின் போது நடைபெற்ற சம்பவம் குறித்த தகவல் வெளிப்படையாக இல்லை. இது குறித்து நீங்கள் யோசித்தால், அது கிட்டத்தட்ட உதவிக்காக அழுவது போல் உள்ளது. நாம் ஏதாவது செய்ய வேண்டும்.
பந்து வீச்சாளர்கள் எது செய்தாலும் அது மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு போட்டியை எளிதாக்கும் வகையில் அமைகிறது. பந்து வீச்சாளர்களுக்கு கடினமாகி விடுகிறது.
தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக அளவில் சாதகமாக உள்ளது. மைதானத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது, இரண்டு புதிய பந்துகள், பவர்பிளே, நிர்ணயித்ததை விட பெரிய பேட் என நீண்டு கொண்டே செல்கிறது.
பந்து வீச்சாளர் நோ-பால் வீசினால், அது ப்ரீ ஹிட்டாக மாறிவிடுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் விதிமுறை மாற்றப்பட்டதை நான் பார்க்கவே இல்லை’’ என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்