என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டொனால்டு டிரம்ப்"
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றவுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டார். மெக்சிகோ எல்லை வழியாக ஹோண்டுராஸ், கவுதமாலா, எல்சால்வேடர் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஊடுருவுகின்றனர்.
அவர்களை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார். அதை ஏற்க அந்நாடு மறுத்து விட்டது.
எனவே மெக்சிகோ எல்லையை மூடப் போவதாக மிரட்டல் விடுத்தார். இருந்தும் அந்நாடு பணியவில்லை. இந்த நிலையில் மெக்சிகோ எல்லையை மூடப்போவதாக மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள அண்டை நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா, மற்றும் எல்சால்வேடர் நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக சட்ட விரோதமாக ஊடுருவு கின்றனர்.
பல ஆண்டுகளாக எங்கள் செல்வத்தை அவர்கள் எடுத்து செல்கின்றனர். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனெனில் மோசமான சட்டங்கள் உள்ளன.
எனவே, அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருபவர்களை தடுத்து நிறுத்தும்படி மெக்சி கோவிடம் உதவி கோரினோம். ஆனால் அதை மெக்சிகோ செய்யவில்லை. அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே மெக்சிகோ எல்லையை மூடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளார். டிரம்பின் இந்த கருத்தை மெக்சிகோ அதிபர் அன்ட்ரஸ் மானிவில் லோபெஷ் ஓபராய் மறுத்துள்ளார். இதன்மீது சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். எங்களால் முடிந்தவரை உதவி புரிந்து வருகிறோம் என்று அவர் கூறினார். #MexicoBorderWall #DonaldTrump
அமெரிக்காவுக்கு வெளிநாட்டினர் ஊடுருவி சட்ட விரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டி பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவர்களுடன் ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களும் சேர்ந்து கொண்டதால் அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் அரசு பணிகள் முடங்கின.
எனவே ரூ.7 ஆயிரம் கோடி (1 பில்லியன் டாலர்) செலவில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்தார். அதை தொடர்ந்து மெக்சிகோ எல்லையில் 92 கி.மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரத்துக்கு சுவர் கட்டவும், அங்கு ரோடு மற்றும் மின் வசதி செய்யும்படி ராணுவ தலைமையகமான பென்டகனிடம் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கோரிக்கை விடுத்து இருந்தது.
அதை பென்டகன் செயல் தலைவர் பாட்ரிக் ஷனாகன் ஏற்றுக் கொண்டார். மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அமெரிக்க ராணுவ துறையின் என்ஜினீயர்களுக்கு அதிகாரம் அளித்து உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் திட்டம் தயாரிப்பது, அதை செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். #MexicoBorderWall #DonaldTrump
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தியதில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இந்திய விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு வீசி அழித்தன. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் ஏற்பட்டது.
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தலையீட்டால் சற்று அமைதி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் இது சம்பந்தமாக கூறியிருப்பதாவது:-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு உருவானதுமே அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் படியும், அந்த மண்ணை பயங்கரவாதிகள் புகலிடமாக பயன்படுத்துவதை தடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
ஆனாலும் இந்த நடவடிக்கை போதுமானவை அல்ல. பயங்கரவாதிகள் இயக்க தலைவர்கள் இன்னும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடும் நிலை உள்ளது. அதை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இனியும் இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்தினால் இந்தியா கொந்தளித்து விடும். அது பெரிய பிரச்சனையாக மாறிவிடும். அதன் பிறகு அதை கட்டுக்குள் கொண்டு வருவது கடினமாக அமையும்.
எனவே ஜெய்ஷ்-இ- முகமது, லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கம் மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் தாக்குதல் நடக்காது என்ற உத்தரவாதத்தை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும்.
அங்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் இது பற்றி ஆய்வு செய்வோம். பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தத்தை கொடுக்கும். தெற்கு ஆசிய பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்பது எங்கள் எண்ணமாகும். அதை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #PulwamaAttack #DonaldTrump #India #US
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறினர். இது உலக நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அப்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் அன் உறுதி அளித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
இதற்கு தீர்வுகாண 2-வது உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேச டிரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரபஸ்பர விருப்பம் தெரிவித்தனர். அதன்படி இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு இந்த மாதம் (பிப்ரவரி) 27, மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. வடகொரியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வியட்நாமின் ஹனோய் நகரில் இச்சந்திப்பு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டிரம்ப் உடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் புறப்பட்டுள்ளார். பியாங்யாங் நகரில் இருந்து ரெயிலில் புறப்பட்டுள்ள கிம் ஜாங் அன், 4,500 கி.மீட்டர் தூரம் சுமார் 60 மணி நேரம் பயணம் மேற்கொண்டு வியட்நாமின் எல்லையோர நகரம் டாங் டாங்கை சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம், மாநாடு நடைபெறும் ஹனோய் செல்கிறார். கிம் ஜாங் அன்-உடன் அவரது சகோதரி கிம் யோ ஜாங், உதவியாளர் கிம் யோங் சோள் உள்பட உயர் அதிகாரிகள் செல்கின்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க பாராளுமன்றத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று பேசினார். அப்போது அமெரிக்காவில் கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும். இங்கு நாம் ஒருவரை ஒருவர் விமர்சிக்கலாம். ஆனால் யாரிடமும் வெறுப்பு அரசியலை கடைபிடிக்க கூடாது. வெறுப்பு அரசியல் தவறானது என்று கூறினார்.
இதைக் கேட்டதும் பெண் சபாநாயகர் நான்சி பெலோச்சி ஆச்சரியம் அடைந்தார். இவர் எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்தவர். இவர் டிரம்பின் பேச்சை கேட்டு கையை டிரம்பின் முகத்திற்கு பக்கத்தில் வைத்து கை தட்டினார்.
டிரம்பை கிண்டல் செய்யும் விதமாக அவர் கை தட்டியது சமூக வலை தளங்களில் வைரலாகியது. டிரம்பை கோபத்துக்கு ஆளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர் கைதட்டினார் என கூறப்படுகிறது. இந்த வீடியோ உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆசிய நாடுகளில் ஒரு அதிபருக்கோ, பிரதமருக்கோ எதிராக பேசினால் கடுமை யான நடவடிக்கை எடுக் கப்படும்.
ஆனால் அமெரிக்காவில் அப்படி கிடையாது. அதிபர் டிரம்பை தரக்குறைவாக கார்ட்டூன் போல வரைந்து செய்திகள் வெளியிட்டாலும் நடவடிக்கை எதுவும் எடுப்ப தில்லை.
அவர் டூவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்துக்களை பிரிண்ட் செய்த செருப்பு கூட சமீபத்தில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த சம்பவம் உலக மக்களை கவர்ந்துள்ளது.
இதே கூட்டத்தில் டிரம்ப் உரையை கேட்க வந்து பள்ளி சிறுவன் ஜோஷ்வா டிரம்ப் (11) தூங்கிய போட்டோக்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. #DonaldTrump
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு தன் மனைவி மெலானியாவுடன் திடீரென ஈராக் நாட்டிற்கு புறப்பட்டார். அவருடன் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்களும் பயணம் மேற்கொண்டனர். அரசு நிர்வாகப் பணிகள் முடங்கியிருப்பதால் டிரம்பின் பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
ஈராக்கில் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அல் ஆசாத் விமானப்படை தளத்திற்கு டிரம்ப் சென்றார். அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளமான அங்கு டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்க ராணுவ தலைவர்கள் மற்றும் வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது தொடர்பாக முடிவு எடுத்த பின்னர் ஈராக்கிற்கு டிரம்ப் திடீர் பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முன்னதாக தன்னுடன் பயணம் செய்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறும் திட்டம் எதுவும் இல்லை என கூறினார். சிரியாவில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெற விரும்புவதாகவும், ஐஎஸ் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் ஏற்படும்போது, தேவைப்பட்டால் ஈராக்கில் உள்ள தளங்களில் இருந்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார். #Trump #AmericanSoldiers
அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டுக்கு பின் 4-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிபர் டிரம்ப் பதவி ஏற்று 2-வது முறையாக நிர்வாக முடக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இரு சபைகளும் மீண்டும் கூட உள்ளது. அப்போது நிர்வாக முடக்கத்தை சரி செய்வது குறித்து விவாதிக்கப்படும். #USShutdown
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சரிவைச் சந்தித்தது.
இதன்பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது, சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா, மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கு அமெரிக்க எல்லைக்கு இடம்பெயரும் அகதிகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து மற்றொரு கேள்வியைக் கேட்ட அகோஸ்டாவிடம், போதும் அமருங்கள் என டிரம்ப் கூறினார். இந்த விவகாரத்தால், டிரம்ப், பத்திரிகையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
செய்தியாளர் சந்திப்பு முடிவுற்ற பின்னர், செய்தியாளர் ஜிம் அகோஸ்ட்டா வெள்ளை மாளிகையில் நுழைவதற்கான அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அனுமதி செய்யப்பட்டது தொடர்பான வழக்கு வாஷிங்டன் பெடரல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சி.என்.என். செய்தியாளரின் நுழைவு சீட்டை உடனடியாக திரும்பி அளிக்குமாறு வெள்ளை மாளிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்புக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இதற்கு முழுத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறோம்" என சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.#Trump #CNN #Acosta
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்