என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தகுதி நீக்கம் வழக்கு
நீங்கள் தேடியது "தகுதி நீக்கம் வழக்கு"
தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம் எல் ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என அமமுக துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
சென்னை:
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முதலில் இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால், இவ்வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இவ்வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும். தகுதிநீக்கம் தொடர்பாக சபாநாயகர் எடுத்த முடிவில் தவறு இல்லை என்று நீதிபதி அறிவித்தார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.
இதுபற்றி டிடிவி தினகரன் கூறுகையில், தகுதி நீக்கம் வழக்கு குறித்து 18 எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வதா அல்லது தேர்தலை சந்திப்பதா என 18 பேரிடமும் நாளை கருத்து கேட்க உள்ளேன்.
நீதிமன்ற தீர்ப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தாது. தமிழகத்தில் இடைத்தேர்தல் வருமா என்பது சந்தேகமாக உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #MLAsDisqualificationCase
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #MLAsDisqualificationCase
சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.
இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.
அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை ஆகஸ்டு 31-ம் தேதி நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார். இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #MLAsDisqualificationCase
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை நாளை முதல் நீதிபதி விசாரிக்க உள்ளார். முதல் நாள் 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் ராமன் வாதம் செய்ய உள்ளார். #18MLAs #MLAsDisqualification
சென்னை:
முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம், தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், வெற்றிவேல், தங்க தமிழச்செல்வன் உள்பட 18 பேர் கடந்த ஆண்டு மனு கொடுத்தனர்.
இதையடுத்து இந்த 18 பேரையும் தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்து கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 18ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாசரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கடந்த 14ந் தேதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து இந்த வழக்கை கடந்த 4 ந்தேதி விசாரணைக்கு எடுத்த நீதிபதி சத்தியநாராயணன், 23-ந்தேதி முதல் தினந்தோறும் 5 நாட்கள் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி இந்த வழக்கை நாளை முதல் நீதிபதி விசாரிக்க உள்ளார். முதல் நாள் 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் ராமன் வாதம் செய்ய உள்ளார். #18MLAs #MLAsDisqualification

இதையடுத்து இந்த வழக்கு 3வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சத்திய நாராயணனை, சுப்ரீம் கோர்ட்டு நியமித்து உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கை கடந்த 4 ந்தேதி விசாரணைக்கு எடுத்த நீதிபதி சத்தியநாராயணன், 23-ந்தேதி முதல் தினந்தோறும் 5 நாட்கள் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி இந்த வழக்கை நாளை முதல் நீதிபதி விசாரிக்க உள்ளார். முதல் நாள் 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல் ராமன் வாதம் செய்ய உள்ளார். #18MLAs #MLAsDisqualification
×

X