என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தமிழக அணி வெளியேற்றம்
நீங்கள் தேடியது "தமிழக அணி வெளியேற்றம்"
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி கடைசி லீக்கில் தோல்வி அடைந்து வெளியேறியது. #VijayHazareTrophy
சென்னை:
37 அணிகள் இடையிலான விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழக அணி தனது கடைசி லீக்கில் நேற்று அரியானாவை, சென்னையில் சந்தித்தது. முதலில் பேட் செய்த அரியானா அணி 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராகுல் திவேதியா 91 ரன்களும் (8 பவுண்டரி, 5 சிக்சர்) ஹிமான்ஷூ ராணா 89 ரன்களும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய தமிழக அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 233 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் அரியானா 77 ரன்கள் வித்தியாசத்தில் 6-வது வெற்றியை பதிவு செய்து கால்இறுதியை உறுதி செய்தது. தமிழக அணியில் அபினவ் முகுந்த் (47 ரன்), கேப்டன் விஜய் சங்கர் (44 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. முரளிவிஜய் 24 ரன்னில் கேட்ச் ஆனார்.
இந்த ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றால் மட்டுமே கால்இறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில், தோல்வியை தழுவியதன் மூலம் தமிழக அணி வெளியேற்றப்பட்டது. 9 ஆட்டங்களில் விளையாடிய தமிழக அணி 5 வெற்றி, 4 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் தனது பிரிவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
‘ஏ’ பிரிவில் மும்பை (28 புள்ளி), மராட்டியம் (26), ‘பி’ பிரிவில் டெல்லி (26) , ஆந்திரா (26), ஐதராபாத் (22), ‘சி’ பிரிவில் அரியானா (28) ஜார்கண்ட் (28), கீழ்நிலை பிரிவான ‘பிளேட்’ பிரிவில் பீகார் (30) ஆகிய அணிகள் கால்இறுதியை எட்டின. ‘சி’ பிரிவில் மட்டும் இன்னும் மூன்று சம்பிரதாய லீக் ஆட்டங்கள் நாளை நடக்க உள்ளன. அதன் பிறகு 14-ந்தேதியில் இருந்து கால்இறுதி சுற்று தொடங்கும்.
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் ஓய்வில் இருக்கும் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, இந்த தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார். அவர் மும்பை அணிக்காக கால்இறுதியில் ஆடுவார். #VijayHazareTrophy

×

X