என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தமிழக பெண் பக்தர்கள்
நீங்கள் தேடியது "தமிழக பெண் பக்தர்கள்"
தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு செல்ல உள்ளதாக கருதி ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala #AyyappaDevotees
திருவனந்தபுரம்:
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக திறந்துள்ளது. இதனால் சபரிமலைக்கு திரளான ஐயப்ப பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலையே இதுவரை நிலவுகிறது. சபரிமலை செல்லும் இளம்பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
இதனால் சபரிமலையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் தமிழக பெண் பக்தர்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்லம் அருகே புனலூரில் பிரசித்தி பெற்ற ஆரியங்காவு அச்சன்கோவில் என்ற ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். பெண் பக்தர்களும் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.
சபரிமலை செல்லும் பக்தர்களும் இந்த கோவிலுக்குச் சென்றுவிட்டு சபரிமலை செல்வார்கள். தற்போது சபரிமலை கோவில் நடைதிறந்து உள்ளதால் அச்சன் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 27 பேர் வேன் மூலம் ஆரியங்காவு அச்சன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் சிவப்பு சேலை அணிந்து அந்த கோவிலுக்குச் சென்றனர். அவர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்ததும் ஐயப்ப பக்தர்கள் அங்கு திரண்டு தமிழக பெண் பக்தர்களை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு அந்த பெண்கள் சாமி தரிசனத்திற்கு செல்ல உள்ளதாக கருதி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரும் விரைந்துச் சென்று ஐயப்ப பக்தர்களை சமரசப்படுத்தினார்கள்.
தமிழக பெண் பக்தர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தாங்கள் சபரிமலை செல்லவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். கேரளாவில் உள்ள முக்கிய கோவில்களான அச்சன் கோவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், சோட்டானிகரை பகவதி அம்மன் கோவில் போன்ற ஆன்மீக தலங்களுக்கு தான் செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதன் பிறகு சமாதானம் அடைந்த ஐயப்ப பக்தர்கள் தமிழக பெண்பக்தர்கள் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.
இதுபற்றி தமிழக பெண் பக்தர்கள் கூறும்போது, நாங்கள் சபரிமலை கோவிலின் ஆச்சாரத்தை மதிப்பதாகவும், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் பலர் சபரிமலைச் சென்று உள்ளதாகவும் தெரிவித்தனர். #Sabarimala #AyyappaDevotees

×

X