என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
நீங்கள் தேடியது "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்"
தயாரிப்பாளர் சங்கத்தில் பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, தி.நகரில் அமைந்துள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு இன்று இரவு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். #TFPC #ProducersCouncil #Vishal
சென்னை:
நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்க தொடங்கினார்கள். பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்துக்கு நேற்று வந்து போராட்டம் நடத்தியதுடன், சங்க அலுவலகத்துக்கும் பூட்டு போட்டனர்.
இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றதாக காலையில் கைது செய்யப்பட்ட நடிகர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு கிண்டி வட்டாட்சியர் ராம்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் இன்று இரவு சீல் வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சக்கட்ட மோதலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றனர். #TFPC #ProducersCouncil #Vishal
தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை உடைக்க முயன்று கைதான விஷால் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். #TFPC #ProducersCouncil #Vishal
சென்னை:
நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர்களில் ஒரு பகுதியினர் போர்க்கொடி தூக்க தொடங்கினார்கள். பொதுக்குழுவை கூட்டவில்லை, வைப்பு நிதியில் முறைகேடு, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, பட வெளியீட்டில் பாரபட்சம், இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு சங்க பொதுக்குழு கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள்.
ஏ.எல். அழகப்பன், டி.சிவா, எஸ்.ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், நந்தகோபால், மைக்கேல் ராயப்பன், தனஞ்செயன் உள்பட சுமார் 50 பேர் திரண்டனர். அவர்கள் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.
இதற்கிடையே, தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்றதாக நடிகர் விஷால் இன்று காலை கைது செய்யப்பட்டார். அவரையும், அவரது ஆதரவாளர்களையும் தியாகராய நகரில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.
இந்நிலையில், சென்னையில் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மாலையில் விடுவிக்கப்பட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடன் கூறுகையில், மிகவும் வேடிக்கையாக உள்ளது. செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்தேன். தவறு செய்தவர்களின் மீது புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தவறு செய்யாத எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையை நான் நம்புகிறேன். நீதிமன்றம் சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். நிச்சயமாக இளையராஜாவுக்கு இசை விழாவை நடத்துவோம்.
சங்கத்தில் கணக்கு கேட்க வேண்டும் என்றால் முறையாக கேட்க வேண்டும், அதற்கென தனி விதி உள்ளது. நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி கொடுக்கப்பட்டு வருகிறது, அதற்கான கணக்கும் உள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இல்லாதவர்கள் எங்கள் மீது புகார் கொடுத்துள்ளனர்.
நல்லது செய்வதற்குப் பெயர் முறைகேடு என்றால் அதை செய்வேன், தொடர்ந்து செய்வேன். 7 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூறுவது தவறானது என தெரிவித்தார். #TFPC #ProducersCouncil #Vishal
சர்கார் படத்தின் எச்.டி. பிரிண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ் விடுத்துள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. #Sarkar #Vijay #TamilRockers #TamilFilmProducersCouncil
சென்னை:
நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் நாளை தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் பதிவிடப்பட்டது.
நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் நாளை தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருக்கும் நிலையில், இந்த படத்தின் எச்.டி. பிர்ண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் பதிவிடப்பட்டது.
இது பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இதனை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், ஒவ்வொரு திரையரங்கிலும், ஒருவரை நியமித்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இருப்பதாகவும், யாரேனும், செல்போனிலோ, கேமரா மூலமாகவோ படத்தை பதிவு செய்தால் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. #Sarkar #Vijay #TamilRockers #TamilFilmProducersCouncil
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X