என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலைமை தேர்தல் கமிஷன்"
இந்திய பாராளுமன்ற தேர்தல், சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி, மே 19-ந் தேதி வரையில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் அமைதியாக நடந்து முடிந்த நிலையில் 483 தொகுதிகளில் 66.88 சதவீத வாக்கு பதிவானது.
பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டீகாரில் 1 என மொத்தம் 59 தொகுதிகளில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியில் பிரதமர் நரேந்திர மோடி (வாரணாசி) மத்திய மந்திரிகள் ரவிசங்கர் பிரசாத் (பாட்னா சாகிப்), ஆர்.கே. சிங் (ஆரா), ராம் கிருபால் யாதவ் (பாடலிபுத்திரா), மனோஜ் சின்கா (காசிப்பூர்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் அனல் பறந்தது.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா, பாரதீய ஜனதா கட்சித்தலைவர் அமித் ஷா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பகுஜன்சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் என தலைவர்கள் பிரசாரங்களின்போது, தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்கள் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் எழுந்தன.
நடத்தை விதிகள் புகார்களை கையாள்வதில் தேர்தல் கமிஷனர்கள் இடையே மோதல் ஏற்பட்டது, இதுவே முதல் முறை.
இந்த நிலையில் பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. எல்லா மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
மொத்தம் 10 கோடியே 1 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்களுக்காக சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்ததாக தகவல்கள் வந்தாலும், அது வாக்குப்பதிவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் ஹரிஷ் முகர்ஜி சாலையில் மித்ரா கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பிற்பகல் 3 மணிக்கு ஓட்டுப்பதிவு செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் கொல்கத்தாவில் வாக்குப்பதிவு செய்தார்.
முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சாரியா உடல்நலக்குறைவால் வாக்களிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன.
உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கோரக்பூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் காலையில் சீக்கிரமாக வந்து வாக்களித்தார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசும்போது, “மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்” என கூறினார்.
அங்கு பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி உள்ளிட்ட பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர கோளாறு புகார்கள் எழுந்தன.
மேற்கு வங்காள மாநிலத்தில் மின்னணு வாக்கு எந்திர கோளாறு புகார்கள் பரவலாக எழுந்தன. புதிய வாக்காளர்களும், பெண்களும் உற்சாகத்துடன் வாக்களித்தனர். பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களும் மோதிக்கொண்டனர். ஜாதவ்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரசார் கள்ள ஓட்டு போட்டதாக பாரதீய ஜனதா கட்சியினர் புகார் கூறினர்.
பாரதீய ஜனதா கட்சித்தலைவர்கள் உத்தரவின்பேரில், வாக்காளர்களை மத்திய படையினர் சித்ரவதை செய்ததாகவும், மிரட்டியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு போடாவிட்டால் உங்களை சுட்டுவிடுவோம் என வாக்காளர்களை மத்திய படையினர் மிரட்டியதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தீரக் ஓ பிரையன் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளிலும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. காதூர் சாகிப் தொகுதியில் நடந்த மோதலில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார். பரவலாக பல இடங்களில் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் கட்சிகளின் தொண்டர்கள் இடையே மோதல்கள் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அங்குள்ள சந்தாலி தொகுதியில் ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தலா ரூ.500 கொடுத்து, அவர்களை சிலர் வாக்களிக்க விடாமல் தடுத்ததாகவும், அவர்களின் விரல்களில் சமூக விரோத சக்திகள் அழியாத மையிட்டதாகவும் புகார்கள் எழுந்து, தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டுள்ளது.
பீகாரில் 8 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 462 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள இடங்களில் தேர்தல் நடந்ததால் 2 ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
முதல்-மந்திரி நிதிஷ் குமார், மகன் நிசாந்துடன் வந்து பாட்னாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு பதிவு செய்தார்.
நேற்றைய இறுதிக்கட்ட தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின.
இத்துடன் கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி நடந்து வந்த பாராளுமன்ற தேர்தல் நேற்று முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் பெரும்பாலானவை பாரதீய ஜனதா கட்சி கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ளன.
இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடக்கிறது. கருத்துக்கணிப்பு முடிவுகள் பலிக்கின்றனவா என்பது அப்போது தெரிய வரும்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா, சிறை செல்ல நேர்ந்ததால் தினகரன் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளரானார். ஆனால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றாக கைகோர்த்துக் கொண்டு அ.தி.மு.க.வை கைப்பற்றியதால் தினகரனால் அதில் நீடிக்க முடிய வில்லை.
அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருந்தவர்களையெல்லாம் ஒன்று திரட்டி ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றார். அந்த வேகத்தில்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அவர் தொடங்கினார்.
அந்த கட்சியில் துணை பொதுச்செயலாளராக இருந்து வந்த தினகரன், உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் பக்கமே இருக்கிறார்கள் என்று தொடர்ந்து கூறிவந்தார். அ.தி.மு.க.வை கைப்பற்றும் நோக்கத்திலேயே அவர் இது போன்று செயல்பட்டு வருவதாக கணிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் ஒரே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் தினகரன் கோரினார். ஆனால் அவரது கட்சி பதிவு செய்யப்படாமல் இருப்பதாகவும், எனவே ஒரே சின்னத்தை ஒதுக்க முடியாது என்றும் கூறி தேர்தல் ஆணையம் கைவிரித்தது.
சுப்ரீம் கோர்ட்டு தலையிட்ட பின்னரே தினகரன் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரே சின்னம் கிடைத்தது. பரிசு பெட்டி சின்னத்தில் அனைவரும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் தினகரன் அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடிவு செய்தார். இதற்கு வசதியாக அ.ம.மு.க. பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்கட்சியின் வக்கீல் செந்தூர் பாண்டியன் இதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது கட்சியை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளோம் என்றார்.
அ.ம.மு.க. கட்சிக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில்சம்பத் நேற்று புதுவையில் பிரசாரம் செய்தார். தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் தொடங்கி அரியாங்குப்பம், முதலியார் பேட்டை ஆகிய இடங்களில் காலையும், மாலையில் நகர பகுதியிலும் நாஞ்சில் சம்பத் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.
தவளகுப்பம் 4 முனை சந்திப்பில் அவர் பேசும்போது, கவர்னர் கிரண்பேடியை பற்றி தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசினார். இதுதொடர்பாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் புதுவை தலைமை தேர்தல் ஆணையர் கந்தவேலுவிடம் புகார் செய்தார்.
புகாருடன் நாஞ்சில் பேசியதற்கான ஆதாரமான சிடியையும் சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அருண், டி.ஜி.பி. சுந்தரிநந்தா ஆகியோரிடமும் புகார் செய்தார்.
இதுதொடர்பாக ரவிச்சந்திரன் கூறும்போது, நாட்டிலேயே முதல் ஐ.பி.எஸ். முடித்த பெண்மணியான கிரண்பேடி நாட்டின் சிறந்த பெண்மணி என பல விருதுகளை பெற்றுள்ளார். அவரைப்பற்றி தரக்குறைவாகவும், இழிவாகவும் தி.மு.க. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார்.
பெண்களை இழிவாக பேசுவதை தி.மு.க.வினர் வாடிக்கையாக வைத்துள்ளனர். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் செய்துள்ளேன். அகில இந்திய தேர்தல் ஆணையருக்கும் இதுதொடர்பான புகார் மனுவை அனுப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #kiranbedi #nanjilsampath
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்