search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி புஷ்கரம் விழா"

    தாமிரபரணி புஷ்கரம் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThamirabaraniMahaPushkaram #Highcourt

    சென்னை:

    நெல்லை மாவட்டம், தென்காசியை சேர்ந்தவர் ஈஸ்வரன் சித்தா. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நெல்லை மாவட்டம், தாமிரபரணியில் 12-ந்தேதி முதல் புஷ்கரம் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில், கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் புகுந்து பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

    எனவே, நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு கமிட்டியை உருவாக்கி, தகுந்த பாதுகாப்பை புஷ்கரம் நிகழ்ச்சிக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிடவேண்டும்“ என்று கூறியிருந்தார்.

     


    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் எம்.மகாராஜா, "நாத்திகர்கள் பிரச்சினை செய்ய வருவார்கள் என்று மனுதாரர் கற்பனை மற்றும் யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார். அவரிடம் அது தொடர்பான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்" என்று வாதிட்டார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கற்பனை, யூகம் அடிப்படையில் பொதுநல வழக்கு தொடர கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதுடன் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம் என்று உத்தரவிட்டனர். #ThamirabaraniMahaPushkaram #Highcourt

    தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில், தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HighCourt
    சென்னை:

    ஐகோர்ட்டில், புலவர் மகாதேவன் என்பவர் தொடர்ந்துள்ள மனுவில், ‘நெல்லை மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் வருகிற 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை புஷ்கரம் விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக நெல்லையில் தைப்பூசப் படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்து மாவட்ட கலெக்டரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

    நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெறும் தைப்பூசப் படித்துறையில் புனித நீராட தடை விதித்து இருப்பது சட்டவிரோதமானது.

    அதேபோல, குறுக்குத் துறை படித்துறையில் நீராடுவதற்கு தடை விதித்து இருப்பதையும் ஏற்க முடியாது. எனவே இந்த 2 படித்துறைகளிலும் புஷ்கர விழாவின்போது பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும்போது, அதில் சுழல் ஏற்படும். குளிப்பவர்கள் அதில் சிக்கினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

    எனவே, அங்கு பெய்யும் மழையின் அளவு, தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில், தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். #HighCourt
    ×