search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியாகிகள் நினைவுதினம்"

    ஜூலை-30 தியாகிகள் நினைவு தினத்தையொட்டி நினைவு சின்னத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
    புதுச்சேரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-30 தியாகிகள் நினைவு தினமாக கம்யூனிஸ்டு கட்சியினர் கடைபிடித்து வருகிறார்கள். அதுபோல இன்று ஜூலை 30-ந்தேதி தியாகிகள் நினைவு தினத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் கடைபிடித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அக்கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் சுப்பையாசிலையில் இருந்து ஊர்வலமாக வந்து புதுவை- கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அஜிஸ் பாட்சா பங்கேற்றார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் மற்றும் நிர்வாகிகள் அபிஷேகம், தினேஷ் பொன்னைய்யா, சேது செல்வம், கீதநாதன், துரை.செல்வம், சுப்பையா, பூபதி, மூர்த்தி, மாதர் சங்கம் லதா ஹேமலதா, இந்திய வாலிபர் சங்கம் அந்தோணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் அதன் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ. சார்பில் சுதேசிமில்லில் இருந்து ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர்கள் பெருமாள், முருகன் மற்றும் நிர்வாகிகள் சீனுவாசன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ×