search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரிகடுகம் பால்"

    சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய 3 பொருட்களும் சித்தர் இலக்கியத்துள் திரிகடுகம் எனப்படுகிறது. உடலில் அதிக கபம் உள்ளவர்கள் திப்பிலி அடங்கிய திரிகடுகம் பால் தயாரித்து குடித்தால் கபம் நீங்கும்.
    தேவையான பொருட்கள் :

    பால் - ½ லிட்டர்
    தண்ணீர் - ½ லிட்டர்
    முந்திரி பருப்பு - 20 கிராம்
    பாதாம் பருப்பு - 20 கிராம்
    சுக்குப்பொடி - ½ தேக்கரண்டி
    மிளகுப்பொடி - ½ தேக்கரண்டி
    திப்பிலிபொடி - சிறிதளவு (ஒரு சிட்டிகை)
    மஞ்சள் பொடி - ¼ தேக்கரண்டி
    ஜாதிக்காய்த்தூள் - 1 சிட்டிகை
    ஏலக்காய்த்தூள் - ½ தேக்கரண்டி
    பனங்கல்கண்டு - தேவையானது அல்லது காய்ச்சி வடித்த வெல்லப்பாகு.



    செய்முறை :

    முந்திரிப் பருப்பு, பாதாம்பருப்பை ஊறவைத்து(ஒரு மணி நேரம்) அம்மியில் அல்லது மிக்சியில் மை போல் அரைத்துக் கொள்ளவும்.

    பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர், அரை லிட்டர் பால் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.

    பொங்கி வரும்போது தீயைக் குறைத்துக் கொண்டு அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.

    அதன் பிறகு தயார் செய்து வைத்துள்ள எல்லா பொடிகளையும் ஒவ்வொன்றாக சேர்த்து கரண்டியில் கலக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

    கமகமவென்று வாசம் வரும்போது இறக்கி விடவும். சற்று ஆறவிடவும்.

    குடிக்கிற பக்குவத்தில் சூடாக இருக்கும்போது இனிப்பு கலந்து குடிக்கவும். இது சளி, இருமலுக்கு சாப்பிட நல்லது. கபத்தை கரைத்து, சுறுசுறுப்பு அளிக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×