என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » திருடர்கள் கைவரிசை
நீங்கள் தேடியது "திருடர்கள் கைவரிசை"
பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி மண்டல் வீட்டை நேற்றிரவு சூறையாடிய கொள்ளையர்கள் 5 லட்சம் நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை அள்ளிச் சென்றனர். #Rs5lakhjewelleriesstolen #BPMandal #BiharformerCMhouse
பாட்னா:
பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியாக கடந்த 1968-ம் ஆண்டு ஒருமாத காலம் பதவி வகித்தவர் பி.பி. மண்டல். அரசு வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு வழங்க பரிந்துரைகளை அளித்த ‘மண்டல் கமிஷன்’ இவரது தலைமையில் தான் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.பி.மண்டல் கடந்த 1982-ம் ஆண்டு காலமான பின்னர், மாதேபுரா மாவட்டம், மாதேபுரா நகரில் உள்ள பூர்விக வீட்டில் இவரது மகனும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மஹிந்திர குமார் மண்டல் தனது குடும்பத்தாருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், மாதேபுரா மாவட்டத்தில் தங்களது மூதாதையர் கிராமமான முர்ஹோ கிராமத்துக்கு மஹிந்திர குமார் தனது குடும்பத்தாருடன் சென்றிருந்தார். நேற்றிரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை அள்ளிச் சென்றனர்.
மேலும், லேப்டாப், கைபேசிகள், துணிமணி, சமையல் பாத்திரம் எல்லாவற்றையும் மூட்டைகட்டி எடுத்து சென்றுள்ளனர். இன்று வீடு திரும்பிய மஹிந்திர குமார், முன்னாள் முதல் மந்திரியின் வீடு கொள்ளையர்களால் சூறையாடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக, அருகாமையில் உள்ள சடார் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மோப்பநாய் உதவியுடன் விசாரணையில் இறங்கிய போலீசார் 3 பேரை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் 80 சதவீதத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். #Rs5lakhjewelleriesstolen #BPMandal #BiharformerCMhouse
×

X