search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம் மோசடி"

    • திருமணத்தின்போது பெண் டாக்டருக்கு கொடுத்த வரதட்சணை நகைகளையும் பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்று விட்டார்.
    • பெண் டாக்டர் அசோக் நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போரூர்:

    சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த 29 வயது இளம்பெண் அசோக் நகர் மாநகராட்சி சுகாதாரத்துறையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த என்ஜினீயர் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது ஐ.ஐ.டியில் பணியாற்றுவதாக கூறிய பிரபாகரனுக்கு பெண் வீட்டார் 111 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

    திருமணம் ஆன சில மாதங்களிலேயே தனது கணவர் மது பழக்கம் கொண்டவர் என்பது தெரிந்தது.

    மேலும் அவர் தினசரி இரவு மதுகுடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டதால் அவர் மீது பெண் டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பற்றி விசாரித்ததில் தனது கணவர் பிரபாகரன் ஐ.ஐ.டி.யில் பணிபுரிந்து வருவதாக கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்ததும் பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையில் பிரபாகரனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதும் அதை மறைத்து தன்னை 2வதாக திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் திருமணத்தின்போது பெண் டாக்டருக்கு கொடுத்த வரதட்சணை நகைகளையும் பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்று விட்டார்.

    இதுபற்றி கேட்டபோது பெண் டாக்டரை தினசரி அடித்து கொடுமைபடுத்தி துன்புறுத்தி வந்தார். மேலும் அவரது குடும்பத்தினரையும் பிரபாகரன் மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து பெண் டாக்டர் அசோக் நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய மகளிர் போலீசார் வரதட்சணை கொடுமை, ஆபாசமாக பேசுதல், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை அருகே 2-வது திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், வாலிபருடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    அடிக்கடி இரண்டு பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் வாலிபர் உடனான காதலை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.

    மேலும் மதுரையை சேர்ந்த திருமணமாகி மனைவியை இழந்த வாலிபர் ஒருவரை இளம்பெண்ணுக்கு திருமணம் செய்வது என முடிவு செய்தனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த இளம்பெண் தனக்கு நடக்க இருக்கும் திருமணம் குறித்து தனது காதலனிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக இளம் பெண்ணை அழைத்துச் சென்று அந்த பகுதியில் உள்ள கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் அவரை திருமணம் செய்தார். பின்னர் இளம்பெண் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அவரை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, வாலிபருடன் பேசக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பெற்றோருக்கு தெரியாமல் தனது 4 வயது பெண் குழந்தையுடன் இரண்டாவதாக திருமணம் செய்த வாலிபருடன் ஓட்டம் பிடித்தார்.

    இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்தனர் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×