search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரும்ப பெறவேண்டும்"

    எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலாவை திரும்ப அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. #KarnatakaCMRace #Vajubhaivala #Congress
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். இன்னும் 15 நாட்களுக்குள் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

    ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், பா.ஜ.க.வுக்கு இருப்பதோ 104 எம்.எல்.ஏ.க்கள். எனவே, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலை விரிக்கத் தொடங்கியிருப்பதாக காங்கிரஸ்  குற்றம் சாட்டியுள்ளது.

    இந்நிலையில், எடியூரப்பாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்த கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலாவை திரும்ப அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.



    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை உள்ளது. ஆனாலும், இவர்களை அழைக்காமல் கவர்னர் வஜுபாய் வாலா பா.ஜ.க.வின் எடியூரப்பாவை முதல் மந்திரியாக பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.  எனவே, அவரை திரும்ப அழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், பிரதமர் மோடி குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை கர்நாடக கவர்னர் அழித்துவிட்டார். எனவே கர்நாடக மாநிலத்தின் அப்போதைய கவர்னர் பரத்வாஜை திரும்ப பெறவேண்டும் என ஜனாதிபதிக்கு டுவிட் செய்ததையும் காங்கிரசார் நினைவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது. #KarnatakaCMRace #Vajubhaivala #Congress
    ×