search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி திருநாள்"

    ஒடிசாவில் உள்ள காப்பகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 300 பேர் விளக்கு ஏற்றியும் மத்தாப்பு கொளுத்தியும் மகிழ்ந்தனர். #OdishaDiwali #MissionAshra
    புவனேஸ்வர்:

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தென் மாநிலங்களைப் பொருத்தவரை  பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். பெரும்பாலான மக்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். சிலர் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் விடுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.



    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மிசன் அஷரா என்ற காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 300 பேர் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களும் மற்றவர்களைப் போன்று தீபாவளி பண்டிகையை அனுபவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி மிஷன் அஸ்ரா இல்லம் மின்விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டு, பிரமாண்டமாக விழா நடத்தப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விளக்கு ஏற்றியும் மத்தாப்புகளை கொளுத்தியும் மகிழ்ந்தனர். #OdishaDiwali #MissionAshra
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DiwaliWishes #TNGovernor #TamilNaduCM
    சென்னை:

    இருள் நீக்கி ஒளி தரும் தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. மக்களை வதம் செய்த கொடிய அசுரனான நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தென் மாநிலங்களில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ராவணனை அழித்து வனவாசம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பியதும் அவருக்கு பட்டாபிஷேகம் செய்த தினமாக வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.



    இந்நிலையில் தீபாவளி கொண்டாடும் தமிழக மக்களுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DiwaliWishes #TNGovernor #TamilNaduCM
    ராமரின் அவதார பூமியான அயோத்தி நகரில் தீபாவளி திருநாளன்று 3 லட்சம் தீபங்களை ஏற்றி உலக சாதனையை உருவாக்க உ.பி.அரசு திட்டமிட்டுள்ளது. #AyodhyaDiwali #Guinnessrecord
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராமஜென்ம பூமியான அயோத்தி நகரில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் தீபங்களை ஏற்றி, இசை, நடன நிகழ்ச்சிகளுடன் கடந்த ஆண்டு தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    அதேவகையில், இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று அயோத்தி நகரில் சரயு நதிக்கரையையொட்டி  3 லட்சம் தீபங்களை ஏற்றி  உலக சாதனையை உருவாக்க உ.பி.அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரீட்டா பகுகுனா தெரிவித்துள்ளார்.

    இந்த நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காக கின்னஸ் சாதனை நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு அனுப்பியுள்ளோம். தீபாவளியன்று சரயு நதிக்கரையில் 300 அடி உயரம் கொண்ட ராமரின் சிலை நிறுவப்படும். 3 நாள் கொண்டாடப்படவுள்ள தீபாவளி விழாவில் கடந்த ஆண்டைப்போலவே கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். #AyodhyaDiwali #Guinnessrecord
    ×