search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்பாக்கி பயன்பாடு"

    உலகம் முழுவதும் 100 கோடி துப்பாக்கிகள் புழக்கத்தில் உள்ளதாகவும், இவற்றில் 84 சதவிகிதம் பொதுமக்கள் கைகளிலும் மீதமுள்ளவை ராணுவம் மற்றும் போலீசார் கைகளில் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    உலகம் முழுவதுமுள்ள ஆயுதங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் ஸ்மால் ஆர்ம்ஸ் சர்வே என்ற அமைப்பு, உலகில் உள்ள 230 நாடுகளில் உள்ள கைத்துப்பாக்கிகள் குறித்த விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி அது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

    பொதுமக்கள், ராணுவம் மற்றும் காவல்துறை போன்று சட்டத்தை நிலைநாட்டும் அமைப்புகள் ஆகியவை வைத்திருக்கும் பல்வேறு ரக துப்பாக்கிகள் போன்று உலகில் மொத்தமாக 100 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் கைத்துப்பாக்கிகளின் எண்ணிக்கை 17% ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், அதிர்ச்சி தரும் தகவலாக 85 கோடிக்கும் அதிகமான துப்பாக்கிகள் பொதுமக்கள் வசம் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் தனியார், தனியாரால் நடத்தப்படும் பாதுகாப்பு நிறுவனங்கள், திருட்டு, கொள்ளை கும்பல்கள் ஆகியவையும் அடங்கும்.

    உலக மக்கள் தொகையில் 4% அளவிற்கே பங்களிப்பை அளிக்கும் அமெரிக்காவில் உலக துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் 40% அளவுக்கு குவிந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அங்கு 40 கோடி துப்பாக்கிகள் பொதுமக்கள் வசம் உள்ளது.

    அதாவது அங்கு வசிக்கும் 100 பேருக்கு 121 துப்பாக்கிகள் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது. கடந்த முறை வெளியிடப்பட்ட அறிக்கையில் 100 பேருக்கு 90 என்ற அளவிற்கே அங்கு துப்பாக்கிகளின் எண்ணிக்கை இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது அங்கு வசிக்கும் மக்களை விட துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள மேலும் ஒரு சுவாரஸ்ய அம்சம் யாதெனில் பொதுமக்களிடம் குவிந்து கிடக்கும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் அமெரிக்காவிற்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா இருப்பதே. இந்தியாவில் பொதுமக்கள் கைவசம் சுமார் 7 கோடி துப்பாக்கிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

    இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் 5 கோடி துப்பாக்கிகளை கொண்டுள்ள சீனா 3வது இடத்தையும் பெற்றுள்ளன. எனினும் சராசரியாக மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 100 நபர்களுக்கு 52 துப்பாக்கிகள் கொண்டுள்ள ஏமன் 2 வது இடத்திலும் 39 துப்பாக்கிகளுடன் மாண்ரினெகரோ மற்றும் செர்பியா நாடுகள் 3வது இடத்தையும் பெற்றுள்ளன.

    இந்த புள்ளிவிவரங்களுக்கு நேர்மாறாக மேலும் ஒரு சுவாரஸ்ய அம்சமும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் மாலாவி ஆகிய நாடுகளில் வசிப்போரில் 100 நபர்களுக்கு ஒன்றுக்கும் குறைவான துப்பாக்கியே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த முறை இதே போன்றதொரு ஆய்வை இதே அமைப்பானது, 2007ஆம் நடத்தியிருந்தது. அப்போது உலகில் மொத்தமே 87 கோடி துப்பாக்கிகளே இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவற்றில் 65 கோடி பொதுமக்களிடம் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 32% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×