என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » துருக்கி அரசு அதிகாரிகள் பணி நீக்கம்
நீங்கள் தேடியது "துருக்கி அரசு அதிகாரிகள் பணி நீக்கம்"
துருக்கியில் கடந்த 2016-ம் அண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 18 ஆயிரத்து 500 அரசு அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்து அந்நாட்டு அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அங்காரா :
துருக்கியில் ராணுவத்தில் ஒருபிரிவினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புரட்சியில் ஈடுபட்டனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டது.
அந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தூண்டியவர் என்று துருக்கி கூறி வரும் மதகுரு பெதுல்லா குலெனின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டி, ஏற்கெனவே ராணுவம், காவல்துறை, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வந்த சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 1 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களை துருக்கி அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மத குரு பெதுல்லா குலன்தான் சதி செய்துள்ளார் என துருக்கி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் அவரை நிபந்தனையின்றி ஒப்படைக்குமாறும் துருக்கி அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், கடந்த 2016-ம் அண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 8 ஆயிரத்து 998 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 6 ஆயிரத்து 152 ராணுவ அதிகாரிகள் உள்பட 18 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அரசிதழில் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த துருக்கி ஜனாதிபதி தேர்தலில் அதிபர் எர்டோகன், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி, முன்பு இருந்ததை விட இம்முறை அதிகப்படியான அதிகாரங்களை உடைய அதிபராக அவர் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×

X