search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துருக்கியின் பொருளாதார பாதிப்பு"

    துருக்கி பொருளாதார பாதிப்பு இந்திய பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது.#RupeeAllTimeLow #RupeeValue #DollarVsRupee
    மும்பை:

    துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததுடன், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் உயர்த்தியது. இதன் காரணமாக துருக்கியின் பணமதிப்பு வெகுவாக சரிந்து, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    துருக்கியின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 69.93 என்ற அளவுக்கு சரிந்தது.

    இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. வர்த்தகத்தின் துவக்கத்தில் ரூபாயின் மதிப்பு சற்று ஏற்றம் பெற்றபோதிலும், சிறிது நேரத்தில் மீண்டும் சரியத் தொடங்கியது. இன்ட்ரா டே வர்த்தகத்தில் போது இந்திய ரூபாயின் மதிப்பு 70.08 என்ற அளவில் மிகவும் சரிந்தது. இது வரலாறு காணாத சரிவு ஆகும்.

    இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்திலும் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பை சரிவில் இருந்து மீட்க ரிசர்வ் வங்கி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. #RupeeAllTimeLow #RupeeValue #DollarVsRupee
    ×