search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்கா தேவி சிலை"

    கொல்கத்தாவில் உள்ள பிரபல உணவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரம் கிலோ சாக்லேட்டால் ஆன துர்கா தேவி சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. #KolkataHolidayInn #chocolateMaaDurga #1000kgchocolate
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் துர்கா பூஜையின்போது பந்தல் அமைத்து துர்கா தேவி சிலைகளை நிர்மாணித்து பூஜைகளை செய்யும் 28 ஆயிரம் குழுக்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையை  மம்தா பானர்ஜி தலைமையிலான அம்மாநில அரசு அறிவித்தது. 

    இதை தொடர்ந்து மேற்கு வங்காளம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் வகைவகையான பந்தல்கள் அமைக்கப்பட்டு, துர்கா தேவியின் சிலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    காய்கறிகளினால் ஆன துர்கா சிலை, சோளத்தால் ஆன துர்கா சிலை என ஒவ்வொருவரும் தனிபாணியில் சிலைகளை அமைத்துள்ளனர். அவ்வகையில், தலைநகர் கொல்கத்தாவில் உள்ள விமான நிலையத்தின் அருகே அமைந்திருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள 10 அடி உயரத்தில் ஆயிரம் கிலோ சாக்லேட்டால் ஆன துர்கா தேவி சிலை பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    வெந்நிற சாக்லேட்டால் ஆன இந்த சிலையை உருவாக்க அந்த ஓட்டல் பணியாளர்கள் 12 நாட்கள் உழைத்ததாக தெரியவந்துள்ளது. #KolkataHolidayInn  #chocolateMaaDurga #1000kgchocolate
    ×