search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூக்குத் தண்டனை"

    காதல் ஜோடி கொலை வழக்கில் கொலையாளி திவாகரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. #SuruliMalaiMurder #SC
    புதுடெல்லி:

    தேனி அருகே சுருளிமலையில் கடந்த 2011ம் ஆண்டு கஸ்தூரி மற்றும் அவரது காதலன் எழில் முதல்வன் ஆகியோர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட திவாகர் மீது தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேனி மாவட்ட நீதிமன்றம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் திவாகருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.



    இதையடுத்து திவாகர் தரப்பில் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், திவாகரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் திவாகரின் மேல்முறையீட்டு மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திவாகருக்கு வரும் 22ம் தேதி (திங்கட்கிழமை) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. #SuruliMalaiMurder #SC

    முன்விரோதத்தில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரபிரதேச கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. #UttarPradesh #MurderCase
    முசாபர்நகர்:

    உத்தரபிரதேச மாநிலம் ஹர்சோலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த கொலை தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கலவரத்தை ஏற்படுத்துதல், கொடுமையான ஆயுதங்களால் தாக்குதல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

    இந்த வழக்கு விசாரணை ஹர்சோலி மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி ராஜேஷ் பரத்வாஜ் முன்பாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட 7 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தார்.
    ×