search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர்"

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய திடீர் தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மற்றும் 2 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக (நவம்பர் 12, 20) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ளூர் போலீசாருடன் ராணுவ வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



    இந்நிலையில், தேர்தல் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக தூர்தர்ஷன் குழுவினர் தண்டேவாடா மாவட்டத்தில் முகாமிட்டுள்ளனர். இன்று ஆரன்பூர் காட்டுப்பகுதி வழியாக அவர்கள் சென்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசாரும் சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் மற்றும் ஆரன்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ருத்திர பிரதாப், கான்ஸ்டபிள் மங்கலு  உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் விரைந்துள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு பிஜப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 4 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Chhattisgarh #NaxalsAttack #DoordarshanCrewKilled

    ×