என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தெருக்குரல் அறிவு"
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நேற்று நடைப்பெற்றது.
- த.வெ.க கட்சி சார்பாக கொள்கை பாடல் வீடியோவை வெளியிட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நேற்று நடைப்பெற்றது. நேற்று தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு வருகை தந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன் பின் ரசிகர்களுக்கு வணக்கம் தெரிவித்த பட்டி கட்சி துண்டை கழுத்தில் அணிந்துக் கொண்டு ஒரு மாஸான ராம்ப் வாக் செய்தார். கடலென நிரம்பி வழியும் தொண்டர்களின் கூட்டத்தைப் பார்த்து சிலாகித்து விஜய் ஆனந்த கண்ணீர் சிந்தினார். பின் கட்சி கொடியை ஏற்றி மாநாடு தொடங்கியது.
விஜய் அவரது அரசியல் கொள்கைகளைப் பற்றியும் அவரது சித்தாந்தத்தை பற்றியும் மிக ஆவேசமாக அவரது தொண்டர்களிடம் உரையாற்றினார். இவரது கொள்கைகளை உள்ளடக்கியபடி த.வெ.க கட்சி சார்பாக கொள்கை பாடல் வீடியோவை வெளியிட்டனர்.
`பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் அறத்தோடு வாழும் குலத்தோன்; இதோ என ஆரம்பிக்கும் பாடல் மிகவும் அழகாகவும் உத்வேகத்துடன் கொள்கையை அடக்கி இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இப்பாடலை அறிவுடன் இணைந்து விஜய்யும் பாடியுள்ளார். விஜய் தன் கட்சியின் கொள்கையை விவரிக்கும் வகையில் அவரே இந்த வீடியோவில் பேசியும்முள்ளார்.
இந்த பாடலை எழுதி பாடிய அனுபவத்தை தற்பொழுது அறிவு பகிர்ந்துள்ளார். இப்பாடலை எழுத ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்?" என்று விஜய் சாரிடம் கேட்டேன். அவர் " இதை செய்ய உன்னால் மட்டும்தான் முடியும்" என்றார். த.வெ.க கட்சியின் கொள்கைப் பாடலை இயற்ற என்னை நம்பிய விஜய் சாருக்கு நன்றி. உங்கள் குரலைப் பதிவு செய்தது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவாக இருக்கும். உங்கள் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார். என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் பட்டித் தொட்டி முதல் பிரபலமானவர் தெருக்குரல் அறிவு.
- சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி"
எஞ்சாய் எஞ்சாமி பாடல் மூலம் பட்டித் தொட்டி முதல் பிரபலமானவர் தெருக்குரல் அறிவு. அதைத்தொடர்ந்த் பல படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் "வள்ளியம்மா பேராண்டி". இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
பாடகர் ஆண்டனி தாசன் பேசியதாவது...
என்னைப்போல் திறமையானவர்களை அறிமுகப்படுத்தும் இயக்குநர் ரஞ்சித் அவர்களுக்கு நன்றி. இந்த ஆல்பத்திற்கு தம்பி அறிவு என்னை அழைத்தது மகிழ்ச்சி. இந்த ஆல்பம் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.
இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது...
காஸ்ட்லெஸ் கலக்டிவ் செய்யும் போது தான் அறிவை முதல் முறை பார்த்தேன். கலை இலக்கியத்தை அரசியல் வடிவமாக்கி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் என் நோக்கம், அந்த வகையில் இயங்கும் அறிவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலிருந்து அவரைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். காலாவில் மிக முக்கிய பாடலை எழுதினார். பல முக்கிய பாடல்களை எழுதியிருக்கிறார். அம்பேத்கருடைய சிந்தனைகள் எனக்கும் அவனுக்குமான நெருக்கமான சிந்தனையாக, உறவாக மாறியது. அம்பேத்கரிய சிந்தனைகளை எளிய வடிவமாக்கி எப்படி சந்தைப்படுத்துவது என்பது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆனால் அறிவு கொண்டு செல்லும் ராப் பாடல்கள் வெற்றி பெறுவதோடு அந்த அரசியலையும் மக்களிடம் கொண்டு செல்வதை நேரில் கண்டிருக்கிறேன். அது தான் அவருக்குப் பெரிய புகழைப் பெற்றுத் தந்துள்ளது. அது எளிதில் கிடைக்காது. உலகளவில் தனி இசைக் கலைஞர்கள் மிகப்பெரிய புகழ் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது இங்கு ஏன் நிகழவில்லை எனும் போது தான் அறிவின் பங்கு மிக முக்கியமானதாகிறது. அவர் மூலம், இப்போது பல கலைஞர்கள் வெளி வந்துள்ளனர். எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் வெற்றியில் அவரது பாடல் வரிகள் மிக முக்கியமானது. ஆனால் அதன் பிரச்சனைகளில் சிக்கி வெளிவந்ததற்குப் பதிலடி தான் இந்த 12 பாடல்கள் என நினைக்கிறேன். என்னால் இசையமைக்கவும் முடியும் என நிரூபிக்கும் விதமாக இந்த பாடலை உருவாக்கியுள்ளார். சோனி நிறுவனம் மூலம் இது மக்களிடம் சென்றடையும் என நம்புகிறேன். அறிவுக்கு இது முதல் படி தான். விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவர் இன்னும் உயரம் செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன் நன்றி.
தெருக்குரல் அறிவு பேசியதாவது...
நான் படிக்கும் காலத்தில் நான் கேட்ட குரல் ஆண்டனி தாசன் அண்ணன் குரல் தான். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் வந்தது மகிழ்ச்சி. இண்டிபெண்டட் மியூசிக் உள்ளே நான் வரக் காரணமே காஸ்ட்லெஸ் கலக்டிவ் மூவ்மெண்ட் தான். அது எனக்கு மட்டுமல்ல, பல கலைஞர்களுக்கு அடையாளம் தந்தது அந்த காஸ்ட்லெஸ் கலக்டிவ் தான், அதை உருவாக்கிய அண்ணன் பா ரஞ்சித்துக்கு நன்றி. வள்ளியம்மா பேராண்டி என்பதில் வள்ளியம்மா வரலாறு மிக முக்கியம். பிரிட்டிஸ் காலத்தில் இங்கிருந்து இலங்கைக்கு அழைத்துச் சென்று தேயிலைத் தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு, பல கஷ்டங்களைத் தாண்டி, இங்கு மீண்டும் வந்து வாழ்வை எதிர்கொண்ட வள்ளியம்மாயின் வரலாறு மிக முக்கியம் என் அடையாளம் அது தான். பொதுவாகப் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எனக்கு நம்பிக்கையே இல்லை. இங்கே என் போல் வாழ்பவர்கள் எப்போது கொல்லப்படுவார்கள் என்றே தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த உலகில் என்னை அடையாளப் படுத்தும் முயற்சியாகத் தான் வள்ளியம்மா பேராண்டி ஆல்பத்தை உருவாக்கினோம். இந்த குழுவில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு என் நன்றிகள். இந்த பயணத்தில் எனக்கு முன் பயணித்த அத்தனை கலைஞர்களுக்கும் என் நன்றிகள். பல பாடல்கள் நம் ஆயாக்களிடம் இருந்து தான் வந்தது, ஆனால் அந்த அடையாளத்தை நாம் மறந்து விடுகிறோம். இந்த அடையாளத்தைத் தொலைத்துவிட்டால் நாம் வேரற்ற மரமாக வெட்டி வீழ்த்தப்படுவோம். எஞ்ஞாயி எஞ்சாமி பாடலின் போது நான் பேசியது பிரச்சனையானது. உன் ஆயா பற்றி பாடவா வந்துள்ளாய் எனக் கேட்டபோது, ஆம் என் ஆயா பற்றிப் பாடத்தான் நான் வந்துள்ளேன் என்றேன். என் மீதான கேள்விகளுக்கான பதில் தான் இந்த ஆல்பம். நாம் வாழும் இன்றைய உலகில் அன்பை மீட்டெடுப்போம் நன்றி.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்தனர்.
- இவர்களை அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கியுள்ளனர்.
நாங்குநேரியில் பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் அரிவாளால் வெட்டில் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அரிவாள் வெட்டில் காயமடைந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சின்னத்துரை, சந்திராசெல்வி ஆகியோரை அரசியல் தலைவர்கள் பலர் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாடகர் தெருக்குரல் அறிவு இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க, physics chemistry maths எல்லாத்தையும் போல, வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமா சொல்லிக்கொடுங்க! Anti-Caste மனநிலை மாணவப்பருவத்திலேயே எல்லாருக்கும் கற்பிக்கப்படனும்.
தெருக்குரல் அறிவு பதிவு
இடஒதுக்கீடு ஒரு இலவசம் , ஆண்ட பெருமைகள் , சாதி அடையாள கயிறுகள், குறியீடுகள் போன்ற தவறான புரிதல்களை அரும்பிலேயே கிள்ளி எறிவது தான் சமகால கல்வியின் பிரதான நோக்கமா இருக்கணும்.சாதிய வன்கொடுமைகளில் யாருடைய ரத்தம் காலகாலமாக சிந்திக்கிடக்கிறது என விவாதிக்காமல் , எல்லா ரத்தமும் சிவப்பு என்றும் சாதியை ஒரு ஆபத்தில்லாத பண்பாட்டு வடிவம் என்றும் , இருந்தும் இல்லாத ஒன்று என கடந்து போவதும் மேலும் ஆபத்தை வருவிக்கும் ! சக மாணவன் படிப்பதையும் சுயமுன்னேற்றம் அடைவதையும் கூட ஏற்க முடியாத மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்தாமல், தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது" என்று பதிவிட்டுள்ளார்.
- தெருக்குரல் அறிவின் 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் அவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக இருந்தது.
- இவர் வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.
2018-ஆம் ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் கூட்டணியில் வெளியான 'காலா' படத்தில் 'உரிமையை மீட்போம்' பாடலை எழுதியன் மூலம் தமிழ் சினிமாவிற்கு பாடகராக அறிமுகமானவர் தெருக்குரல் அறிவு. தொடர்ந்து வட சென்னை, நட்பே துணை, ஜிப்சி போன்ற பல படங்களில் பாடல்கள் எழுதி பாடியும் உள்ளார்.
தெருக்குரல் அறிவு
இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான 'என்ஜாய் எஞ்சாமி' ஆல்பம் பாடல் இவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக இருந்து. இந்த பாடல் மூலம் இவர் பலரது கவனத்தை ஈர்த்தார். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.
தெருக்குரல் அறிவு பதிவு
இந்நிலையில், தெருக்குரல் அறிவு, தற்போது தான் காதலித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என் திமிரான தமிழச்சி" எனக் குறிப்பிட்டு கல்பனா அம்பேத்கர் என்பவரை காதலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கல்பனா அம்பேத்கர்
பா. இரஞ்சித் தயாரிப்பில் வெளியான மக்கள் இசை நிகழ்ச்சியில் கல்பனா அம்பேத்கர் உதவியாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'.
- இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருந்தனர்.
சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் அறிவு ஏன் நிராகரிக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பி வந்தனர்.
என்ஜாய் எஞ்சாமி
இதற்கு பதிலளிக்கும் விதமாக தெருக்குரல் அறிவு தனது சமூக வலைதளப்பக்கத்தில், " "என்ஜாய் எஞ்சாமி பாடலை நானே உருவாக்கி, எழுதி, பாடி, நடித்தேன். யாருமே இதற்கான மெட்டையோ, ஒரு சொல்லையோ தரவில்லை. அந்தப் பாடலை இப்போது இருப்பது போல உருவாக்குவதற்காக ஆறு மாதங்களாக உறக்கமில்லாத, மிகுந்த அழுத்தத்துடன் கூடிய இரவுகளைக் கடந்தேன்.
இருப்பினும் இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. இறுதியில் உண்மைதான் எப்போதும் வெல்லும்." என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் 'என்ஜாயி என்ஜாமி' பாடல் உருவான விதம் பற்றி விரிவாக விளக்கம் அளித்து பதிவு ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், "கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், நமது வரலாற்றையும் இயற்கையும் கொண்டாடும் விதமாக தமிழில் ஒரு பாடல் உருவாக்க வேண்டும் என்று தீ என்னிடம் கூறினார். அதன் பிறகு நான் `என்ஜாயி என்ஜாமி' பாடலை கம்போஸ், புரோகிராம் மற்றும் ரெக்கார்டிங் செய்து இணைந்து பாடினேன். மேலே கூறப்பட்ட என்னுடைய பணியானது உலகளவில் `தயாரிப்பாளர்' என்று குறிப்பிடப்படுகிறது.
இதை இந்தத் துறை சார்ந்த பலரும் ஏற்கெனவே அறிவர். நான், தீ, அறிவு எங்களுக்குள் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நிறைந்த அன்பிற்காகவும், தனியிசை மேல் எங்களுக்கு உள்ள காதலாலும் ஒன்றாக இணைந்தோம்.
தீ மற்றும் அறிவு பாடலைப் பாட ஒப்புக்கொண்ட நிலையில், இருவரும் சேர்ந்து பாடலுக்காக பணியாற்றினர். தீ-யின் பல வரிகளுக்கு அவரே இசையமைத்தார். அறிவு பாடல் வரிகள் எழுத ஒப்புக்கொண்டார். நான் மீதி இசையையும், அறிவு பகுதிக்கான ட்யூனையும் கம்போஸ் செய்தேன்.
இந்தப் பாடலுக்கான அடித்தளத்தை மிக நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, பாடலுக்கான ஓட்டத்தையும், திரைக்கதையையும் உருவாக்கி, பல வாழ்க்கை கதைகளைக் கூறி அறிவுடன் பல மணி நேரம் செலவழித்த இயக்குனர் மணிகண்டனுக்கு எங்கள் குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது அற்புதமான திரைப்படமான 'கடைசி விவசாயி'தான் இந்தப் பாடலுக்கு இன்ஸ்பிரேசன்.
பாடலில் உள்ள ஒப்பாரி வரிகள் அரக்கோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பாட்டிகள் மற்றும் தாத்தாக்களின் பங்களிப்பாகும். அவர்களின் பணியை கௌரவித்த அறிவுக்கு நன்றி. `பந்தலுல பாவக்கா' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய ஒப்பாரி பாடல்களில் ஒன்று.
என்ஜாய் எஞ்சாமி
ரகிட ரகிட, அம்மா நானா, என்னடி மாயாவி போன்ற எனது பல பாடல்களைப் போலவே, நான் இசையமைக்கும் பாடலில் நானே சில வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். இந்தப் பாடலில் 'என்ஜாயி என்ஜாமியும்' அப்படிப்பட்ட ஒன்றுதான். என்னுடைய இந்தப் பொருத்தமற்ற சொற்றொடரைச் சுற்றி அறிவு அற்புதமான வரிகளை உருவாக்கியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இப்பாடலின் முழு உருவாக்கம் 30 மணி நேரத்திற்குள் செய்யப்பட்டது. படப்பிடிப்பிற்கு முன்பு என்ஜாயி என்ஜாமியை பதிவு செய்ய சில மணிநேரங்களே இருந்ததால், எங்களின் பணி வேகமாகவும், வேடிக்கையாகவும் தன்னிச்சையாகவும் இருந்தது.
இந்தப் பாடலின் அனைத்து வருமானத்தையும், உரிமைகளையும் தீ, அறிவு மற்றும் நானும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம். இதில் நான் வெளிப்படைத் தன்மையுடனே இருக்க விரும்புகிறேன். தீ, அறிவு இருவருக்கும் பக்கபலமாக நின்று எனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் பணியாற்றி, சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு எந்தவொரு பாரபட்சமின்றி கிரெடிட்ஸ் கொடுத்துள்ளேன்.
என்ஜாயி என்ஜாமி ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிவு பற்றிய எனது பேச்சே அதற்கு சாட்சி. செஸ் ஒலிம்பியாட் 2022-ல் தீ மற்றும் கிடாக்குழி மாரியம்மாளின் என்ஜாயி என்ஜாமி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, அறிவு அப்போது வெளிநாட்டில் இருந்ததால் அவரால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. மேலும் அவரது தற்போதைய அமெரிக்க பயணத்திட்டம் காரணமாக அவர் கலந்து கொள்ள முடியாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடமும் தெரிவித்திருக்கிறார்.
அறிவு ஒரு அற்புதமான கலைஞன் என்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அறிவின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் 'அனல் மேலே பனித்துளி' திரைப்படத்தில் நான் இசையமைத்து விரைவில் வெளிவரவிருக்கும் "கீச்சே கீச்சே" பாடல் 'என்ஜாய் என்ஜாமி' பாடலுக்குக் கொடுத்த அதே அன்பை 'கீச்சே கீச்சே' பாடலுக்கும் கொடுத்தால் அது ஒரு கலைஞனாக அறிவுக்கு பொருத்தமாக இருக்கும்.
ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்காக எனது தளத்தை நான் எப்போதும் பயன்படுத்தியிருக்கிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கலை இரண்டுமே அதற்குச் சான்றாகும். எனது வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் பின்பற்றும் பணி நெறிமுறை, கலாசாரம் மற்றும் தோழமை ஆகியவை அனைவரும் அறிந்த ஒன்றே! கலையின் மீதும், நம் நாட்டில் உள்ள அனைத்து அற்புதமான கலைஞர்களின் மீதும் மட்டுமே அன்பு கொண்டிருங்கள், வரும் மாதங்களில் உலகளவில் பல புதிய தமிழ் குரல்களின் எழுச்சியைக் காண்போம்!
இந்தப் பாடல் உருவாக உதவியாக இருந்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த சிறப்பு பாடலில் ஈடுபட்டுள்ள எவருடனும் பொது அல்லது தனிப்பட்ட விவாதத்திற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன். மேலும் கலைகளை உருவாக்கி மக்களை ஒன்றிணைப்பதே எனது குறிக்கோள்!
வாங்கோ வாங்கோ ஒண்ணாகி!" என்று பதிவிட்டிருந்தார்.
— Santhosh Narayanan (@Music_Santhosh) August 1, 2022
- சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'.
- இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருந்தனர்.
சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ மற்றும் 'தெருக்குரல்' அறிவு ஆகியோரின் குரலில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'. ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா யூ-ட்யூப் தளத்தில் வெளியான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நிலமற்ற தேயிலை தோட்ட அடிமைகளாக இருந்து அவதிப்பட்ட வள்ளியம்மாள் உள்ளிட்ட சில மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் வெளியான இப்பாடல் பல நிகழ்ச்சிகளிலும் பல இடங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.
தெருக்குரல் அறிவு
இதையடுத்து, சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை. இது தொடர்பாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தெருக்குரல் அறிவு தற்போது தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "என்ஜாய் எஞ்சாமி பாடலை நானே உருவாக்கி, எழுதி, பாடி, நடித்தேன். யாருமே இதற்கான மெட்டையோ, ஒரு சொல்லையோ தரவில்லை.
அந்தப் பாடலை இப்போது இருப்பது போல உருவாக்குவதற்காக ஆறு மாதங்களாக உறக்கமில்லாத, மிகுந்த அழுத்தத்துடன் கூடிய இரவுகளைக் கடந்தேன். இருப்பினும் இது அனைவரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சிதான், அதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்காக அது வள்ளியம்மாளின் வரலாறு இல்லையென்றோ என்னுடைய முன்னோரான நிலமற்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் வரலாறு இல்லையென்றோ ஆகிவிடாது.
என்னுடைய ஒவ்வொரு பாடலிலும் தலைமுறை தாண்டிய அடக்குமுறையின் தழும்புகள் இருக்கும். இந்தப் பாடலில் இருந்ததைப் போலவே. இந்த நிலத்தில் ஆயிரக்கணக்கான நாட்டுப்புறப் பாடல்கள் இருக்கின்றன. முன்னோர்களின் மூச்சை, வலியை, வாழ்க்கையை, அன்பை, எதிர்ப்பை, ஒட்டுமொத்தமாக அவர்களுடைய இருப்பைச் சுமந்துவரும் பாடல்கள். இவையெல்லாம் அழகிய பாடல்களாக உங்களுடன் பேசுகின்றன.
ஒரு தலைமுறையின் ரத்தத்தையும் வியர்வையையும் விடுதலையளிக்கும் கலையின் பாடல்களாக மாறியிருக்கிறோம். அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியை பாடல்களின் மூலமாக எடுத்துச் செல்கிறோம். நீங்கள் தூங்கும்போது உங்கள் சொத்தை யாராவது பறித்துச் செல்ல முடியும். ஆனால், விழித்திருக்கும்போது முடியாது. ஜெய்பீம். இறுதியில் உண்மைதான் எப்போதும் வெல்லும்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு முன்பு 'ரோலிங் ஸ்டோன் இந்தியா' என்ற ஆங்கில புத்தகத்தில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை பாராட்டும் வகையில் ஒரு செய்தி குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில் தெருக்குரல் அறிவின் பெயர் இடம்பெறவில்லை இதற்காக இயக்குனர் பா.ரஞ்சித் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்