search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்"

    நேபாளத்தில் நடைபெற்று வரும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஜூனியர் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. #SAFFChampionship #IndianFootball #SAFFU15Championship
    புதுடெல்லி:

    தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (எஸ்ஏஎப்எப்) சார்பில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 15 வயதிற்குட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணி இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பூட்டான் அணியை எதிர்கொண்டது.

    துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், பூட்டான் வீரர்களை முன்னேற விடாமல் தடுத்ததுடன், வாய்ப்புகளை வீணடிக்காமல் கோல் அடித்தனர். 4-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் ஷுபோ கோல் அடித்து கணக்கை தொடங்கினார்.

    அதன்பின்னர் 66-வது நிமிடத்தில் சுபாவும், 83-வது நிமிடத்தில் ஷுபோவும், 89-வது நிமிடத்தில் அமானும் கோல் அடித்து அசத்தினர். பூட்டான் வீரர்களின் கோல் முயற்சி வீணானது. இறுதியில் 4-0 என இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #SAFFChampionship #IndianFootball #SAFFU15Championship
    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவை வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன் பட்டம் வென்றது. இதை கொண்டாட பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது #INDvMDV #SAFF
    7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்றது. அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது. ஒரு அரையிறுதியில் நேபாளத்தை வீழ்த்தி மாலத்தீவும், மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    நேற்றிரவு இந்தியா - மாலத்தீவு அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் மாலத்தீவு வீரர் மஹுதீ முதல் கோலை அடித்தார். அதன்பின் இரு அணிகளும் முதல் பாதி நேரம் வரை கோல் அடிக்கவில்லை. இதனால் 45 நிமிட ஆட்ட முடிவில் இந்தியா 0-1 என பின் தங்கியிருந்தது.



    2-வது பாதி நேர ஆட்டத்தில் இந்திய வீரர்களால் கோல் அடிக்கவில்லை. மாறாக 66-வது நிமிடத்தில் மாலத்தீவு அணியின் ஃபசிர் கோல் அடித்தார். இதனால் மாலத்தீவு 2-0 என முன்னிலை வகித்தது. இந்திய வீரர்கள் எவ்வளவு போராடியும் 90 நிமிடத்திற்குள் கோல் அடிக்க இயலவில்லை.



    இன்ஜூரி நேரத்தில் 92-வது நிமிடத்தில் பாஸ்சி ஒரு கோல் அடித்தார். அதன்பின் கோல் அடிக்க முடியாததால் மாலத்தீவு 2-1 என வெற்றி பெற்று முதன்முறையாக தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.

    இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை (18.09.2018) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரில் பாகிஸ்தானை 3-1 என வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா. #INDvPAK #SAFF
    7 அணிகள் இடையிலான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வங்காள தேசத்தில் நடந்து வருகிறது. இதன் அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் அணிகள் முன்னேறியது.

    ஒரு அரையிறுதியில் மாலத்தீவு - நேபாளம் அணிகள் மோதின. இதில் மாலத்தீவு 3-0 என வெற்றி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல் ஏதும் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் இந்தியாவின் மன்வீர் சிங் 48-வது மற்றும் 69-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். சுமீத் பாஸ்சி 84-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் 88-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் ஹசன் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. இந்தியா - மாலத்தீவு இடையிலான இறுதிப் போட்டி செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது.
    ×