search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனி மாவட்டத்தில் மழை"

    தேனி மாவட்டத்தில் தொடரும் சாரல் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் கொளுத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முதல்போக நெல் சாகுபடி மற்றும் மானாவாரி பயிர்களை பயிரிட்ட விவசாயிகளுக்கு தற்போது பெய்து வரும் சாரல் மழை ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர்.

    நேற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்தது. பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதும் மாலை நேரத்தில் பெய்த சாரல் மழையால் பூமி குளிர்ந்தது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.40 அடியாக உள்ளது. 950 கன அடி நீர் வருகிறது. 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.96 அடியாக உள்ளது. 1144 கன அடி நீர் வருகிறது. 2170 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. வருகிற 10 கன அடி நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.09 அடியாக உள்ளது. 30 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 10, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 16, சோத்துப்பாறை 9, கொடைக்கானல் 22.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது முதல் போக நெல் பாசனம் மும்முரமாக நடந்து வருகிறது.
    கம்பம்:

    கேரள மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இடைவிடாது பெய்து வரும் கன மழையினால் 10 பேர் உயிழந்துள்ளனர். இதே போல கேரளாவில் மட்டும் ஒரே நாள் மழைக்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த மழையின் தாக்கம் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழையாக பெய்து வருகிறது. சுருளி அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை விடப்பட்ட நிலையில் ஏராளமானோர் சுருளி அருவியில் வந்து நீராடிச் சென்றனர்.

    மேலும் ஆடி அமாவாசை நெருங்க உள்ளதால் சுருளி அருவிக்கு அதிக அளவு பொதுமக்கள் வருகை தருவார்கள். தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது முதல் போக நெல் பாசனம் மும்முரமாக நடந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கம்பம், கூடலூர் குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, காமையகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து பின்பு நடவு பணிகளை மேற்கொண்டனர்.

    கடந்த 20 நாட்களுக்கு முன் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு இடையே வளர்ந்த களைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தேனி, சின்னமனூர், கம்பம், போடி, கூடலூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    ×