என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தொழிலாளர் துறை மந்திரி கோபால் ராய்
நீங்கள் தேடியது "தொழிலாளர் துறை மந்திரி கோபால் ராய்"
வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர். #ParlimentElection #AamAadmiParty
புதுடெல்லி:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மே மாதம் பாராளுமன்ற தேர்தலை நடத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அக்கட்சியை சேர்ந்த தொழிலாளர் துறை மந்திரி கோபால் ராய் டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் டெல்லி மற்றும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் டெல்லியின் 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது நினைவிருக்கலாம். #ParlimentElection #AamAadmiParty
×

X