என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை"
புதுச்சேரி:
புதுவை அரும்பார்த்த புரம் சண்முகம் நகர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 42). லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே ராமச்சந்திரன் சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமச்சந்திரன் தனது மனைவி- மகனுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். திடீரென நள்ளிரவில் ராமச்சந்திரனை காணவில்லை.
இதையடுத்து அவரது மனைவி பக்கத்து அறையில் சென்று பார்த்த போது அங்கு கணவர் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
மரக்காணம் அருகே முகையூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேலு (வயது 23). இவர், கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பூத்துறை கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்பவரின் மகள் ரபீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஜிப்மரில் தனியார் கேண்டீனில் தொழிலாளியாக வேலை செய்து வந்த சக்திவேலு வேலைக்கு சென்று வர வசதியாக புதுவை காமராஜர் சாலையில் ஒரு வாடகை வீட்டில் மனைவி- குழந்தையுடன் வசித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
அதுபோல் நேற்று முன் தினம் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ரபீதா கணவனுடன் கோபித்து கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
மனைவி கோபித்து சென்றதால் மனவேதனை அடைந்த சக்திவேலு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் வீட்டில் மனைவியின் சேலையால் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.
நேற்று காலை கேண்டீனுக்கு சக்திவேலு வேலைக்கு வராததால் கேண்டீன் உரிமையாளர் சுந்தர்ராஜ் சந்தேகம் அடைந்து சக்திவேலுவின் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு சக்திவேலு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சக்திவேலுவை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்திவேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்