search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி"

    ராக்கிங் கொடுமையால் நர்சிங் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் சிங்கம்பிள்ளை பட்டியை சேர்ந்த பானுப்ரியா (18) என்ற மாணவியும் விடுதியில் தங்கி நர்சிங் படித்து வருகிறார்.

    முதலாம் ஆண்டு மாணவியான இவரை அதே விடுதியில் தங்கி படித்து வரும் சக மாணவிகள் 2 பேர் ராக்கிங் செய்து வந்துள்ளனர். சாதி பெயரை சொல்லி இருவரும் அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளனர்.

    இதனால் மனம் உடைந்த மாணவி பானுப்ரியா தூக்க மாத்திரைகளை போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராக்கிங் தொடர்பாக விடுதி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ராக்கிங்கில் ஈடுபட்ட மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    ×