என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நவாஸ் ஷரிப்"
லாகூர்:
பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி போட்டியிட்டது. அப்போது தேர்தல் பிரசாரம் செய்த இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றால் ‘நவீன பாகிஸ்தானை உருவாக்குவேன். சர்வாதிகாரத்தை ஒழிப்பேன்’ என்றார். ஆனால் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பின் அதற்கு நேர் மாறான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் தலைமை செயலகம் உள்ளது. ’அங்கு நுழையும் பெண்கள் தலையில் முக்காடு அல்லது துப்பட்டா அணிய வேண்டும்’ என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அலுவல் காரணமாக சித்ராபட் என்ற பெண் லாகூரில் உள்ள தலைமை செயலகம் சென்றார். அவர் தலையில் முக்காடு மற்றும் துப்பட்டா அணியாமல் சென்று இருந்தார்.
அதைப் பார்த்த அலுவலக காவலாளிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். முக்காடு அல்லது துப்பட்டா இல்லாமல் பெண்களை உள்ளே நுழைய விடக்கூடாது என பஞ்சாப் சுகாதார நல மந்திரி டாக்டர் ரஷித் உத்தர விட்டுள்ளதாக கூறினார்.
அந்த உத்தரவை காட்டும் படி சித்ராபட் அவருடன் வாக்குவாதம் செய்தார். அதற்கு அவர் வாய்வழி உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இத்தகவலை சித்ராபட் டுவிட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதுதான் இம் ரான்கானின் நவீன பாகிஸ்தானா? சர்வாதிகாரம் ஒழிப்பா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 15 ஆன்டுகளுக்கும் மேலாக நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஆட்சியில் இருந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்து இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. #imrankhan #dupatta
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் தம்பி ஷாபாஸ் ஷரிப். இவர் பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஆக இருந்தார். நவாஸ் ஷரிப் சிறை தண்டனை பெற்றபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராக இருக்கிறார்.
இவர் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்த போது வீட்டு வசதி வாரிய ஊழலில் ஈடுபட்டதாக கூறி சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷீர் கடந்த ஜூலை மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அடிடாலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நவாஸ் ஷரிப் மற்றும் மகள் மரியம் நவாஸ் இஸ்லாமாபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லாகூர் வந்தடைந்தனர். அவர்களை, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) கட்சியை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
மேலும், பலத்த பாதுகாப்புகளுடன் வீட்டிற்கு சென்ற ஷரிப்பை வரவேற்கும் விதமாக விமான நிலையம் முதல் லாகூர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு வரை சாலையின் இருபுறமும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் திரண்டு இருந்தனர்.
ஷரிப்பின் விடுதலையை கொண்டாடும் விதமாக பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும், இனிப்புகளை வழங்கியும் அவர்கள் மகிழ்சியை வெளிப்படுத்தினர். #Sharifjailsentencessuspended #NawazSharifreleased
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரின் சார்பிலும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவின் மீது விசாரணை நடந்துவந்த நிலையில் லண்டனில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நவாஸ் ஷரிப்பின் மனைவி குல்சூம் நவாஸ் சமீபத்தில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள நவாஸ் ஷரிப், அவரது மகள், மருமகன் ஆகியோர் சிறையில் இருந்து 3 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டனர். பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷீர் கடந்த ஜூலை மாதம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இஸ்லாமாபாத் ஐகோர்ட் இன்று தீர்ப்பளித்தது.
பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா உத்தரவிட்டுள்ளார்.
#Sharifjailsentencessuspended #NawazSharifreleased
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.
தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு நவாஸ் ஷரிப் விண்ணப்பித்திருந்தார். அவரையும் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோரையும் 3 நாட்கள் பரோலில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குல்சூம் நவாஸ் ஆன்மா சாந்தியடைய லண்டன் நகரின் ரிஜென்ட் பார்க் பகுதியில் உள்ள பெரிய மசூதியில் நேற்று ‘ஜனாஸா’ தொழுகை நடைபெறுகிறது. பின்னர், அங்கிருந்து விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட குல்சூமின் உடல் லாகூரில் உள்ள ஜத்தி உம்ரா பகுதில் அமைந்திருக்கும் நவாஸ் ஷரிப் பண்ணை வீட்டில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. #NawazSharif #KulsumNawaz
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
நவாஸ் ஷரிப் மனைவி குல்சூம் நவாஸ் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார். 68 வயதான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார்.
தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு நவாஸ் ஷரிப் விண்ணப்பித்திருந்தார். அவரையும் மகள் மரியம் நவாஸ் உள்ளிட்டோரையும் 3 நாட்கள் பரோலில் விடுவித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், குல்சூம் ஷரிப் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக,
நவாஸ் ஷரிப்புக்கு அவர் அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், கடந்த 2015-ம் ஆண்டில் நவாஸ் ஷரிப் பேத்தி திருமணத்துக்கு அறிவிக்கப்படாத பயணமாக லாகூர் சென்றிருந்தபோது மறைந்த குல்சூம் ஷரிப்பை சந்தித்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார்.
அவரது ஆன்மா இளைப்பாறல் அடையவும், அவரை பிரிந்து வாடும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் போதிய மனவலிமையை தருமாறும் இறைவனை பிரார்த்திப்பதாக அந்த கடிதத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். #Modicondoles #KulsoomNawaz
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தற்போது அவென்பீல்டு ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். இவருடன் இவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தார் ஆகியோரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.
இவரது உடல்நலக்குறைவை காரணம் காட்டியே நவாஸ் ஷரிப்பும், மகள் மரியமும் ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் லண்டனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவரது மறைவால், ரவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோர் பரோல் மூலம் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. #NawazSharif #KulsumNawaz
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷரிப் மீது 3 ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. லண்டனில் சொகுசு இல்லம் வாங்கிய வழக்கில், நவாஸ் ஷரிப், மகள் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் என 3 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, நவாஸ் ஷரிப் மீது அல்-அஜீஜியா எஃகு ஆலை உட்பட மேலும் 2 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணையை முடிக்க இதுவரை 4 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி முகமது அர்ஷத் மாலிக், கால அவகாசம் வேண்டி கடந்த வாரம் எழுத்துப்பூர்வமான மனுவை உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று துவங்கியது. இந்த விசாரணையில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த விசாரணையின் போது, வாரம் ஒருமுறை விசாரணை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 6 வாரங்களுக்குள் நவாஸ் ஷரிப் மீதான வழக்குகளை விசாரித்து முடிக்குமாறு தலைமை நீதிபதி சகிப் நிசார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. #Pakistan #NawazSharif
லண்டன் அவன்பீல்ட் குடியிருப்பு தொடர்பான ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் கடந்த 13-ம் தேதியில் இருந்து ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் நவாஸ் ஷரிப்புக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்புக்காக அடிடாலா சிறைக்குள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையே, நோய் தீவிரமடைந்து சிறுநீரகம் செயலிழந்துவிடும் அபாயநிலையில் இருக்கும் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்தனர். அடிடாலா சிறைச்சாலை அமைந்துள்ள பஞ்சாப் மாகாண நிர்வாகம் இந்த பரிந்துரையை பரிசீலித்து வந்தது.
இதற்கிடையில், தனக்கு நெஞ்சு வலிப்பதாக நவாஸ் ஷரிப் தெரிவித்ததையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நவாஸ் ஷரிப்-ஐ சிறப்பு மருத்துவர்கள் குழு பரிசோதித்தது. அவருடைய இ.சி.ஜி. முடிவு திருப்திகரமாக இல்லாததை கண்ட டாக்டர்கள் உடனடியாக நவாஸ் ஷரிப்புக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டனர்.
நேற்றிரவு அடிடாலா சிறைச்சாலையில் இருந்து விமானம் மூலம் இஸ்லாமாபாத் கொண்டு செல்லப்பட்ட நவாஸ் ஷரிப், பாகிஸ்தான் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறப்பு மருத்துவர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் கண்காணித்து வருகின்றது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு தலைமை மருத்துவமனையின் இதயநோய் சிகிச்சை பிரிவில் நவாஸ் ஷரிப் அனுமதிக்கப்பட்டுள்ள தனி வார்டை அவர் அங்கிருந்து வெளியேறும்வரை கிளைச்சிறையாக அறிவித்து இஸ்லாமாபாத் நகர கமிஷனர் அலுவலகம் நேற்று பின்னிரவில் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. #NawazSharif #Sharifhospitalward #NawazSharifsubjail
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்