என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நார்வே செஸ் சாம்பியன்ஷிப்
நீங்கள் தேடியது "நார்வே செஸ் சாம்பியன்ஷிப்"
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவுக்கு எதிரான 8-வது சுற்று போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். #ViswanathanAnand #NorwayChessChampionship
ஆஸ்லோ:
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது எட்டாவது போட்டியில் அமெரிக்க வீரர் பேபியானோ கார்வானாவை எதிர்கொண்டார். இப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வியடைந்தார். இதையடுத்து முதலிடத்தில் இருந்த ஆனந்த் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இதுவரை 8 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார். வீஸ்லி சோ - அமெரிக்கா, பேபியானோ கார்வானா - அமெரிக்கா, கார்ல்சன் - நார்வே, ஹிகாரு நாகமுரா - அமெரிக்கா ஆகியோர் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். #ViswanathanAnand #NorwayChessChampionship
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். #ViswanathanAnand #NorwayChessChampionship
ஆஸ்லோ:
நார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருக்கும் 10 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ஏழாவது போட்டியில் பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவை எதிர்கொண்டார். இப்போட்டியின் 40-வது நகர்த்துதலின் போது மேக்ஸ்மி தோல்வியை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஆனந்த், 1 புள்ளி பெற்றார்.
இதன் மூலம் இதுவரை 7 போட்டியில் விளையாடியுள்ள விஸ்வநாதன் ஆனந்த், 3.5 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் வீஸ்லி சோ (3.5 புள்ளிகள்), நார்வேவின் கார்ல்சன் (3.5 புள்ளிகள்), அர்மேனியாவின் லெவான் அரோனியன் (3.5 புள்ளிகள்) ஆகியோரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். #ViswanathanAnand #NorwayChessChampionship
×

X