search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி மந்திரி"

    ராகுல் காந்தி முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அந்த சர்ச்சையை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளார். #RahulGandhi #ArunJaitley
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர்கள் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியின் கல்வித்தகுதி பற்றி புகார் கூறிவரும் வேளையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அந்த சர்ச்சையை காங்கிரஸ் பக்கம் திருப்பியுள்ளார். சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு நாள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் பா.ஜனதா வேட்பாளர்கள் கல்வித் தகுதி பற்றியதாக இருக்கிறது. ஆனால் ராகுல் காந்தியின் கல்விச் சான்றுகளை தணிக்கை செய்தால் கிடைக்க வேண்டிய பதில்கள் ஏராளமாக இருப்பதை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள். இவ்வளவு ஏன், அவர் முதுநிலை பட்டம் பெறாமல் எம்.பில் பட்டம் பெற்றது எப்படி? இந்தியாவின் எதிர்க்கட்சி பிரசாரம் செய்வதற்கான காரணத்தை வாடகைக்கு தேடும் நிலையில் உள்ளது.



    அங்கு ஒரு தலைவர் இல்லை, ஒரு நல்லுறவு இல்லை, குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லை, உண்மையான பிரச்சினைகள் இல்லை. ஆச்சரியமளிக்கும் வகையில் பிரசாரத்தை கேட்பவர்களும் இல்லை. ரபேல் ஒப்பந்த பிரசாரம் - பொய், தொழில் அதிபர்களின் கடன் தள்ளுபடி - பொய், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி - மிகப்பெரிய பொய். ஒரு மாதம் பிரசாரம் செய்கிறார்கள், எதை முன்னிலைப்படுத்துகிறார்கள் என்பதே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #RahulGandhi #ArunJaitley
    சுவிஸ் நாட்டின் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். #SwissParliament #FinanceMinister #Maurer
    ஜெனீவா:

    சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் ஆண்டுதோறும் அதிபரை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கும். இந்த நிலையில் அடுத்த ஓராண்டு காலத்துக்கு அதிபராக அந்த நாட்டின் நிதி மந்திரியாக இருந்து வரும் உய்லி மவுரர், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இவர் வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

    இவர் 7 உறுப்பினர்களைக் கொண்ட பெடரல் கவுன்சிலுக்கு (மந்திரிசபை) தலைமை தாங்குவார். அதே நேரத்தில் அவருக்கென்று சிறப்பு அதிகாரம் எதுவும் கிடையாது. மந்திரிகளுக்கு உள்ள அதிகாரம்தான் அவருக்கும் வழங்கப்படுகிறது.

    மேலும் அந்த நாட்டின் எரிசக்தி துறை மந்திரியாக வயோலா அம்ஹெர்டும், பொருளாதார துறை மந்திரியாக கரின் கெல்லரர் சுட்டரும் தேர்வு செய்யப்பட்டனர். 
    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தடையால் பெரும் பொருளாதாரச் சரிவை ஈரான் சந்தித்துள்ள நிலையில் அந்நாட்டு நிதி மந்திரியை பாராளுமன்றம் இன்று பதவி நிக்கம் செய்தது. #Iranianparliament
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஈரான் நாட்டு நாணயத்தின் மதிப்பு ஒரேநாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.

    கடந்த ஆண்டுவாக்கில் 42,890 ரியால்களாக இருந்த அமெரிக்க டாலரின் மதிப்பு படிப்படியாக கூடிக்கொண்டே போய் கடந்த மாத இறுதியில் 57,500 ரியால்களாக உயர்ந்து கடந்த மே மாதவாக்கில் 80 ஆயிரம் ரியால்களுக்கு விலைபோனது. இதனால், ஈரானின் பொருளாதாரம் முற்றிலுமாக நிலைகுலைந்து காணப்படுகிறது.

    நிலைமை மேலும் மோசம் அடைவதை தவிர்க்கும் வகையில் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் பொருளாதார நிபுனர்களும், எதிர்க்கட்சியினரும் எச்சரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரான் நாட்டு பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித்துறை மந்திரி மசவுத் கர்பாசியன்-ஐ அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வாக்களித்தனர்.

    இதேபோல், சமீபத்தில் அந்நாட்டின் மத்திய வங்கி தலைவரை நீக்கம் செய்து அதிபர் ஹசன் ரவுகானி உத்தரவிட்டதும், தொழிலாளர் நலத்துறை மந்திரியை பதவி நீக்கம் செய்து பாராளுமன்றம் வாக்களித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. #Iranianparliament #Iranfinanceremoved #MasoudKarbasian
    துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற எர்டோகன் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். #Turkey #Erdogan
    அங்காரா:

    துருக்கி நாட்டில் 2016-ம் ஆண்டு ராணுவத்தின் ஒரு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அதிபர் எர்டோகன் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக முறியடித்தார்.

    அதன்பின்னர் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்ற பிறகு, நாட்டின் நிர்வாகத்தில் அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் அந்த நாடு 95 ஆண்டு கால நாடாளுமன்ற ஜனநாயக முறையில் இருந்து அதிபர் ஆட்சி முறைக்கு மாறி உள்ளது. இதன் காரணமாக எர்டோகன் எதிர்ப்பாளர்கள், துருக்கியின் ஜனநாயகம் அழிவுப்பாதையில் சென்றுவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.



    இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிபர் பதவியை மீண்டும் ஏற்றுக்கொண்ட எர்டோகனுக்கு மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் வந்துவிட்டது.

    உடனே அவர் தனது மருமகன் பேரட் அல்பேராக்கை நாட்டின் நிதி மந்திரியாக நியமனம் செய்து உள்ளார். இதே போன்று ராணுவ தளபதியாக இருந்து வந்த ஜெனரல் ஹூலுசி அகாரை ராணுவ மந்திரியாக நியமித்தார். மெவ்லுட் கவுசொக்லு வெளியுறவு மந்திரியாக தொடர்கிறார்.  #Turkey #Erdogan  #Tamilnews
    ராஜபக்சேவின் ஊழல், மோசடியால் கடன் நெருக்கடியில் இலங்கை அரசு தத்தளிப்பதாக நிதிமந்திரி மங்கள சமரவீரா கூறியுள்ளார். #RajapaksaCorruption

    கொழும்பு:

    இலங்கை நிதிமந்திரி மங்கள சமரவீரா கொழும்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் அரசு பல ஊதாரித்தனமான திட்டங்களை தீட்டியது. அதை செயல்படுத்த சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிடம் அதிக அளவில் கடன் பெற்றார்.

    வெளிநாடுகளிடம் இருந்து ரூ.65 ஆயிரம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. அதில் ராஜபக்சே அரசு மிக அதிக வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கோடிகடன் சீனாவிடம் இருந்து ஹம்பந் கோட்டா துறைமுகம் மற்றும் ராஜபக்சே பெயரில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையத்துக்காக வாங்கப்பட்டுள்ளது.

    ராஜபக்சே பெயரில் கட்டப்பட்ட விமான நிலையத்துக்கு தினமும் ஒரே ஒரு விமானம் மட்டுமே வந்து செல்கிறது.


    இதுபோன்ற பல ஊதாரித் தனமான திட்டங்கள் நிறை வேற்றப்பட்டன. ராஜபக்சே ஆட்சியில் ஊழலும், மோசடியும் பெருமளவில் நடந்துள்ளது. இதனால் கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இது அடுத்த ஆண்டில் மிகவும் மோசமடையும். ஏனெனில் வருகிற 2019-ம் ஆண்டில் ஏராளமான கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய நிலை உள்ளது’’ என்றார். #RajapaksaCorruption

    ×