என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
நீங்கள் தேடியது "நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி"
டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கு நூலஅள்ளி அரசு சுகாதார நிலையத்தில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி:
டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கு நூலஅள்ளி அரசு சுகாதார நிலையத்தில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கினார்.
நூலஅள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கர்ப்பிணி கால பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி விளக்கி பேசினார். வீடுகளில் பெண்கள் வீட்டை சுத்தமாக வைத்து பராமரிக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க வீட்டை சுற்றி கொட்டாங்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர், மூட்டை ஓடு, டயர், உடைந்த மண்பானை சட்டி ஆகிய பொருட்களில் தேங்கும் மழைநீரால் டெங்கு கொசு உருவாகிறது.
அந்த தேங்கி இருந்த மழைநீரில் இருந்து உருவான ஒரு கொசுவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. டெங்கு கொசு பரவாமல் இருக்க வீடுகளை அனைவரும் சுத்தமாக பராமரித்து வைக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தீவிரமாக கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
×

X