search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீச்சல் போட்டி"

    ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்டிரோக் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் செஜ்வால் தகுதி பெற்றார். #asiangames2018
    நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 50 மீட்டர் பிரஸ்டிரோக் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சந்தீப் செஜ்வால் தகுதி பெற்றார். அவர் தகுதி சுற்றில் 27.95 வினாடியில் கடந்து 6-வது இடத்தை பிடித்து முன்னேறினார்.

    ஆண்களுக்கான 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டி தகுதி சுற்றில் இந்திய வீரர் அத்வாய் பேஜ் 15 நிமிடம் 29.96 வினாடியில் கடந்தார். ஆனால் இது இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போதுமானதாக இல்லை. அதனால் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தார்.

    ஆண்கள் 4 x 100 மீட்டர் மெட்லே ரீளே பிரிவில் ஸ்ரீஹரிநட்ராஜ், சந்தீப் செஜ்வால், சாஜன் பிரகாஷ், டிசாசா ஆகியோரை கொண்ட இந்திய அணி (3.44.94) தகுதி சுற்றில் 9-வது இடத்தை பிடித்து வாய்ப்பை இழந்தது. #asiangames2018
    ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. #AsianGames2018 #Swimming
    ஜகார்தா:

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று காலை நீச்சல் போட்டிக்கான தகுதி சுற்றுகள் நடந்தன. ஆண்களுக்கான 4x100 மீட்டர் பிரிஸ்டைல் ரிலே பிரிவில் டிசோசா, அன்ஷுல், சாஜன் பிரகாஷ், விர்தால்காடே ஆகியோரை கொண்ட இந்திய அணி தகுதி சுற்றில் (3 நிமிடம் 25.17 வினாடி) 8-வது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்திய வீரர் மணிஅபினேஷ் 56.98 வினாடியிலும், மற்றொரு இந்திய வீரரான சாஜன் பிரகாஷ் 54.06 வினாடியிலும் பந்தய தூரத்தை கடந்தனர்.

    ஆனால் இது இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதியாக இல்லை. சாஜன் பிரகாஷ் 12-வது இடமும், மணிஅபினேஷ் 26-வது இடமும் பிடித்தனர். இதன்மூலம் அவர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை.

    இதேபோல் ஆண்களுக்கான 100 மீட்டர் பிரஸ்ட்ஸ்ரோக் பிரிவில் இந்திய வீரர் சந்தீப் (1 நிமிடம் 2.07 வினாடி) இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. அவர் தகுதி சுற்றில் 10-வது இடத்தை பிடித்தார்.

    டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா- ஹாங்காங்கின் சாங்வாங்குடன் மோதினார்.

    இதில அங்கிதா ரெய்னா 6-4, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அங்கிதா ரெய்னா பதக்கத்தை உறுதி செய்தார். #AsianGames2018 #Swimming
    புதுக்கோட்டையில் நடந்த மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் மாணவிகள் உள்பட 90 பேர் பங்கேற்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட நீச்சல் கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நேற்று மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.எம்.கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அதிகாரி வாஞ்சிநாதன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50 மாணவிகள் உள்பட 90 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகள் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியே பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதேபோல போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை மாணவ, மாணவிகள், மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நீச்சல் கழக தலைவர் ராஜமாதா ரமாதேவி, செயலாளர் முருகப்பன், பொருளாளர் குணசேகரன் உள்பட பலர் செய்திருந்தனர்.
    தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    சென்னை:

    தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 35-வது சப்-ஜூனியர் மற்றும் 45-வது ஜூனியர் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் வளாகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. 4 வயது பிரிவுகளில் நீச்சல் போட்டிகளும், 3 வயது பிரிவுகளில் டைவிங் போட்டிகளும் நடத்தப்படுகிறது. இதில் 650 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். போட்டியை தமிழக போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் தொடங்கி வைக்கிறார்.

    பரிசளிப்பு விழாவில் சர்வதேச முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

    இந்த போட்டியில் இருந்து ஜூன் 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெறும் தேசிய சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் நீச்சல் போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.

    இந்த தகவலை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 
    ×