search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி கிருபாகரன்"

    10 வயது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரி கடலூரை சேர்ந்த பெற்றோர் தொடர்ந்த வழக்கில், மருத்துவ அறிக்கையை பார்த்ததும் நீதிபதி கிருபாகரண் கண்ணீர் சிந்தினார். #MercyKilling #MAdrasHC
    சென்னை:

    கடலூர் மாவட்டம் சோழத்தரத்தை சேர்ந்த திருமேனி என்ற தையல் தொழிலாளியின் 10 வயது மகனுக்கு வாய்பேச முடியாது, அடிக்கடி வலிப்பு ஏற்படுவதோடு, மூளையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தனது மகனுக்கு பல்வேறு குழந்தைகள் நல மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லாததாலும், தையல் தொழிலாளி என்பதால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாலும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

    மேலும் தினம்தோறும் தனது மகனுக்கு 20 முறை வலிப்பு வருகிறது. மருந்துகள் கொடுத்தால் வலிப்பு ஏற்படும் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அவனை பரிசோதித்த மருத்துவர்கள் தனது மகனை குணப்படுத்த முடியாது என தெரிவித்துவிட்டனர்.

    எனவே தனது மகனை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் அடங்கிய அமர்வு சிறுவனை பரிசோதனை செய்வதற்கான தகுதியான மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டனர்.

    இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மருத்துவ குழு தாக்கல் செய்த அறிக்கையில் சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள அரிய நோயை சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை படித்ததும் நீதிபதி கிருபாகரன் கண்ணீர் சிந்தினார். சக நீதிபதி பாஸ்கரனும் சோகமானார்.

    இதனை அடுத்து, சிறுவனின் பெற்றோருக்கு மாதம் தோறும் நிதியுதவி வழங்க முடியுமா? இது போன்ற பிரச்சனைகளுக்கு என தனி திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் ஏன் உருவாக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
    காவல் துறையினருக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் தேவை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
    சென்னை :

    காவல் துறையினருக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் காவல் துறையினருக்கு வார விடுப்பு அவசியம் தேவை என அவர் மீண்டும் வலியுறுத்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    காவல் துறையினருக்கு கட்டாய வார விடுப்பு வழங்குவது குறித்து நீதிபதி கிருபாகரன் குறிப்பிட்டுள்ளதாவது :-

    வாரவிடுப்பு நாட்களிலும் காவலர்கள் பணிக்கு அழைக்கப்படுகின்றனர். வாரவிடுப்பு நாட்களில் பணிக்கு வந்தால் படியாக வழங்கப்படும் ரூ.200 நிறுத்தப்படுமா ?

    காவல் துறையினருக்கு வார விடுப்பு அவசியம் தேவை, விடுமுறை நாட்களை காவலர்கள் குடும்பத்தினருடன் செலவிட வேண்டும். காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக ஜூலை 19ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.

    காவல்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காவல்துறையினர் காப்பாற்ற வேண்டும், குற்றவாளிகளுடன் கவல்துரையினர் கைகோர்க்க கூடாது.

    வாகனங்களில் கட்சிக்கொடிகள் மற்றும் தலைவர்களின் படங்களை வைத்து செல்லும் வாகனங்களை போலீசாரால் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ? ஏன் என்றால் எந்த புற்றில்  என்ன பாம்பு இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எனவே, கட்சி அடையாளங்களுடன் செல்லும் வாகனங்களையும் போலீசார் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது எனவும் சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் தமிழக அரசியல் குறித்து பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்த வரவேற்பு போல தற்போது யாருக்கும் இல்லை. தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது

    நில அபகரிப்பாளர்கள், குண்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். ஒரு லட்சம் வாக்காளர்கள் கையெழுத்திட்டால் தான் அரசியல் கட்சியை பதிவு செய்ய வேண்டும் என தகுதி நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
    நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்வதில் அரசை மட்டும் குறை சொல்லக்கூடாது என வழக்கு விசாரணை ஒன்றில் சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். #NEET
    சென்னை:

    நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க அரசு தவறி விட்டதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரனையில் கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு தற்கொலைகள் அரசியல் கட்சிகளால் அரசியல் ஆதாயமாக்கப்படுகிறது. மாணவர்களுக்கு முன்கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிக்கின்றனர். மாணவர்களின் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது என கூறினார்.

    இந்த மனு தொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.
    ×