search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதிகள் பதவியேற்பு"

    சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதிகளாக அனிருதா போஸ், போபண்ணா, பூஷன் ராமகிருஷ்ணா கவாய், சூர்யகாந்த் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் காலியாக இருந்த 4 பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார். அதன்படி நீதிபதிகளாக ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.



    இந்நிலையில், புதிய நீதிபதிகள் 4 பேரும் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் முன்னர் 27 பேராக இருந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 31 பேராக உயர்ந்துள்ளது. 
    நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நாளை காலை பதவியேற்றுக் கொள்கின்றனர். #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
    புதுடெல்லி:

    டெல்லி தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் கர்நாடக தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும்படி கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த 11ம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொண்டது.

    இதற்கிடையே, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்தார்.



    இந்நிலையில், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நாளை காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.  #SCJudges #DineshMaheshwari #SanjivKhanna
    ×