search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜாஜ் அர்பனைட்"

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய ஸ்கூட்டரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    இந்தியாவில் பெயர் அறியப்படாத நிறுவனத்தின் ப்ரோடோடைப் ஸ்கூட்டர் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஸ்கூட்டர் பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அர்பனைட் என்ற பிராண்டில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

    முன்னதாக பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சோதனை செய்யப்படும் ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனத்துடையது என்ற வாக்கில் தகவல் வெளியாகி வருகின்றன. பஜாஜ் தவிர மஹிந்திரா நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆலையை பூனேவில் இயக்கி வருகிறது.



    இதனால் சோதனையில் சிக்கியிருக்கும் புதிய ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனம் உருவாக்கியதா அல்லது மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கூட்டரா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது புதிய ஸ்கூட்டர் உற்பத்திக்கு தயாரான மாடல் போன்றே காட்சியளிக்கிறது.

    இதன் இடதுபுறம் என்ஜின் பாகமும், வலதுபுறம் எக்சாஸ்ட் சிஸ்டமும் காணப்படுகிறது. இத்துடன் டெயில் பகுதியில் ட்வின்-இன்க்லைன் செய்யப்பட்ட டெயில் லைட்களும் அகலமான இருக்கையும் காணப்படுகிறது. இரு அம்சங்களும் ஏற்கனவே வெளியாகி இருந்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டரின் வரைபடங்களுடன் ஒற்றுபோகும் வகையில் இருக்கிறது. 

    புதிய அர்பனைட் ஸ்கூட்டர் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் தனது பெட்ரோல் ஸ்கூட்டர் மாடலை மீண்டும் அறிமுகம் செய்யலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் ஸ்கூட்டர் மிகவும் பிரபல மாடலாக இருந்தது.

    புகைப்படம் நன்றி: Team-BHP
    ×