என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பஜாஜ் ஆட்டோ
நீங்கள் தேடியது "பஜாஜ் ஆட்டோ"
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த பல்சர் 250 சீரிஸ் மாடல்கள் வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய பல்சர் 250 சீரிஸ் மாடல்களின் வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. புதிய பல்சர் 250 முதல் யூனிட் நவம்பர் 15 ஆம் தேதி வினியோகம் செய்யப்பட்டது. புதிய பல்சர் என்250 மற்றும் எப்250 மாடல்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றின் விலை முறையே ரூ. 1.38 லட்சம் மற்றும் ரூ. 1.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
புதிய பல்சர் மாடல்களில் ஒரே மாதிரியான அம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றில் 249.07சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24 பி.ஹெச்.பி. திறன், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் என்250 சுசுகி ஜிக்சர் 250 மற்றும் யமஹா எப்.இசட்.250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பஜாஜ் பல்சர் எப்250 மாடல் சுசுகி ஜிக்சர் 250 எஸ்.எப். மற்றும் யமஹா பேசர் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
இந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய ஸ்கூட்டரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பெயர் அறியப்படாத நிறுவனத்தின் ப்ரோடோடைப் ஸ்கூட்டர் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்த ஸ்கூட்டர் பஜாஜ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அர்பனைட் என்ற பிராண்டில் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
முன்னதாக பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், சோதனை செய்யப்படும் ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனத்துடையது என்ற வாக்கில் தகவல் வெளியாகி வருகின்றன. பஜாஜ் தவிர மஹிந்திரா நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆலையை பூனேவில் இயக்கி வருகிறது.
இதனால் சோதனையில் சிக்கியிருக்கும் புதிய ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனம் உருவாக்கியதா அல்லது மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கூட்டரா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது புதிய ஸ்கூட்டர் உற்பத்திக்கு தயாரான மாடல் போன்றே காட்சியளிக்கிறது.
இதன் இடதுபுறம் என்ஜின் பாகமும், வலதுபுறம் எக்சாஸ்ட் சிஸ்டமும் காணப்படுகிறது. இத்துடன் டெயில் பகுதியில் ட்வின்-இன்க்லைன் செய்யப்பட்ட டெயில் லைட்களும் அகலமான இருக்கையும் காணப்படுகிறது. இரு அம்சங்களும் ஏற்கனவே வெளியாகி இருந்த பஜாஜ் அர்பனைட் ஸ்கூட்டரின் வரைபடங்களுடன் ஒற்றுபோகும் வகையில் இருக்கிறது.
புதிய அர்பனைட் ஸ்கூட்டர் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் தனது பெட்ரோல் ஸ்கூட்டர் மாடலை மீண்டும் அறிமுகம் செய்யலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பஜாஜ் நிறுவனத்தின் செட்டாக் ஸ்கூட்டர் மிகவும் பிரபல மாடலாக இருந்தது.
புகைப்படம் நன்றி: Team-BHP
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் விலை ரூ.82,253 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் தற்போதைய அவெஞ்சர் 180 குரூசர் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி இருக்கிறது. பழைய 180 சிசி அவெஞ்சர் மோட்டார்சைக்கிள் ரூ.6000 வரை விலை அதிகம் ஆகும். மேலும் இந்த மோட்டார்சைக்கிள் புதிய பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்படவில்லை.
புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள்: எபோனி பிளாக் மற்றும் ஸ்பைசி ரெட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் 160.4சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் பலசர் 160 என்.எஸ். மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இதன் செயல்திறன் சற்று வித்தியாசமாக டியூன் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலில் இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 13.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. என்ஜின் மாற்றம் தவிர அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலின் மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
பிரேக்கிங்கை பொருத்தவரை அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மாடலின் முன்புறம் 260 எம்.எம். டிஸ்க் பிரேக், பின்புறம் 130 எம்.எம். டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்குகளுடன் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிள் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BajajPulsar
இந்தியாவில் எந்த ஒரு மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் தயாரிப்பாளரும் இனிமேல் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். பிரேக்கிங் வசதி இல்லாத வாகனங்களைத் தயாரிக்க முடியாது. இதனால் அனைத்து இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களும் தங்களது வாகனங்கள் அனைத்திலும் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். பிரேக்கிங் வசதியை கூடுதல் சிறப்பம்சமாக சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் இளைஞர்களின் விருப்பமான தேர்வாக இருக்கும் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் என்.எஸ்.160 மோட்டார்சைக்கிளில் தற்போது ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே பஜாஜ் நிறுவனம் தனது தயாரிப்புகள் அனைத்திலும் ஏ.பி.எஸ். அல்லது சி.பி.எஸ். வசதியை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
புதிதாக ஏ.பி.எஸ். யூனிட் தவிர மோட்டார்சைக்கிள் என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அந்த வகையில் பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 மாடலில் 160.3 சி.சி. திறன் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 15.5 ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும், 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது.
இந்தியாவில் பஜாஜ் பல்சர் என்.எஸ். 160 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் விலை ரூ.85,939 முதல் துவங்கி ரூ.92,595 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அவெஞ்சர் ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளின் இந்திய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #BajajAvenger
குரூயிஸ் மோட்டார்சைக்கிளில் பஜாஜ் மாடலின் அவெஞ்சர் ரக மோட்டார்சைக்கிள் மிகச் சிறப்பான மாடலாக இருக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் 180 சி.சி. கொண்ட அவெஞ்சர் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது.
தற்போது அதற்குப் பதிலாக 160 மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்கிறது. இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஏ.பி.எஸ். வசதி வழங்கப்படுகிறது.
குரூயிஸ் மாடலில் 220 சி.சி. மாடலைத் தொடர்ந்து 180 சி.சி. மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் பெருமளவு வித்தியாசம் இல்லாததால் 180 சி.சி. மாடலுக்குப் பதிலாக தற்போது 160 சி.சி. கொண்ட அவெஞ்சர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த என்ஜின் 15.5 பி.ஹெச்.பி. திறனை 8,500 ஆர்.பி.எம். வேகத்திலும் 14.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. 180 சி.சி. மாடலுக்கும் இந்த மாடலுக்கும் பெருமளவு வித்தியாசம் கிடையாது. டெலஸ்கோப்பிக் போர்க் மற்றும் இரட்டை ஷாக் அப்சார்பர் பின்புறம் கொண்டது.
இந்தியாவில் இதன் விலை ரூ.81,036 (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மோட்டார்சைக்கிள் விலையில் நான்கு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. #BajajAuto
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ.2.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் சி.என்.ஜி. வேரியண்ட் விலை ரூ.2.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பஜாஜ் தனது க்யூட் வாகனத்தை பல்வேறு கட்டங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் குவாட்ரிசைக்கிள் என்ற பெருமையை பஜாஜ் க்யூட் பெற்றிருக்கிறது. இந்த வாகனம் ஆட்டோ மற்றும் கார்களுக்கு இடைப்பட்ட வாகனமாக இருக்கிறது.
இந்தியாவில் ஆட்டோக்களுக்கு மாற்றாக க்யூட் வாகனம் பயன்பாட்டிற்கு வரும் என பஜாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பஜாஜ் க்யூட் வழக்கமான மூன்று சக்கர வாகனங்களை விட பெரியதாக இருக்கிறது. பல்வேறு வசதிகளுடன் பஜாஜ் க்யூட் சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கிறது.
அந்த வகையில் புதிய வாகனத்தில் பஜாஜ் நிறுவனம் டூயல் ஹெட்லேம்ப்கள், பிளாஸ்டிக் பம்ப்பர், வைப்பர் உள்ளிட்டவற்றை வழங்கியிருக்கிறது. பஜாஜ் க்யூட் வாகனம் 12-இன்ச் ஸ்டீல் வீல்களை கொண்டிருக்கிறது. வாகனத்தின் உள்புறம் மூன்று பயணியும் ஒரு ஓட்டுனர் பயணிக்க முடியும்.
இத்துடன் அனலாக் ஸ்பீடோமீட்டர், பேசிக் ஸ்டீரிங் வீல் மற்றும் கச்சிதமான இடவசதி கொண்டிருக்கிறது. பஜாஜ் க்யூட் பெட்ரோல் வேரியண்ட் 216சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 13 பி.ஹெச்.பி. பவர், 18.9 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
சி.என்.ஜி. வேரிண்ட் 216சிசி என்ஜின் கொண்டிருக்கிறது. எனினும் இது 10.8 பி.ஹெச்.பி. பவர், 16.1 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. பஜாஜ் க்யூட் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 35 கிலோமீட்டரும், சி.என்,.ஜி. வேரியண்ட் 43 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிஷன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #Pulsar180FNeonEdition
இந்திய மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ இந்தியாவில் புத்தம் புதிய பல்சர் 180எஃப் நியான் எடிஷன் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய பல்சர் 180 விலை ரூ.87,450 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் 180எஃப் வடிவமைப்பு சக்திவாய்ந்த 220எஃப் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
பஜாஜ் பல்சர் 180எஃப் நியான் எடிஷன் தற்போதைய பல்சர் 180 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் என்ஜினுடன் வருகிறது. அதாவது
புதிய 180 மாடலிலும் 178.6சிசி ஏர்-கூல்டு, DTS-i என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 17 பி.ஹெச்.பி. பவர் @8500 ஆர்.பி.எம்., 14 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். வழங்குகிறது.
பல்சர் 180எஃப் மாடலின் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 260எம்.எம்., பின்புறம் 230 எம்.எம். அளவில் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கள் ஏ.பி.எஸ். வசதியுடன் வருகிறது. சஸ்பென்ஷனை பொருத்தவரை பல்சர் 180எஃப் நியான் எடிஷனின் முன்புறம் கன்வென்ஷனல் ஃபோர்க் மற்றும் பின்புறம் கியாஸ்-சார்ஜ் செய்யப்பட்ட ட்வின் ஷாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பை பொருத்தவரை பல்சர் 180எஃப் மாடல் 220எஃப் போன்றே காட்சியளிக்கிறது. பைக்கின் முன்புறம் சிறிய ஃபேரிங் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆரஞ்சு நிற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளது. இவற்றை பைக்கின் பக்கவாட்டுகளிலும் பார்க்க முடியும்.
பல்சர் மற்றும் 180 பேட்ஜ்கள் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டுகளில் காணப்படுகிறது. இதன் ஹெட்லேம்ப் வடிவமைப்பு பெரிய மாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் வடிவமைப்புடன் புதிய பல்சர் 180எஃப் லைட்டிங் அம்சமும் 220எஃப் மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
பஜாஜ் நிறுவனம் தனது மேம்பட்ட ஃபிளாக்ஷிப் மோட்டார் சைக்கிளான 2019 டாமினர் 400 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. 2019 பஜாஜ் டாமினர் 400 அதிகளவு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மோட்டார் சைக்கிளில் 373சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இது தற்போதைய மாடலை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சி.பி.எஸ். வசதி கொண்ட டிஸ்கவரி 110 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #BajajDiscover110 #Motorcycle
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் (சி.பி.எஸ்.) வசதி கொண்ட டிஸ்கவர் 110 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சி.பி.எஸ். வசதி கொண்ட டிஸ்கவரி 110 மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் ரூ.52,273 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 01, 2019 முதல் 125சிசி மற்றும் அதற்கும் அதிக சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஏ.பி.எஸ். வசதியும், 125சிசிக்கும் குறைவான திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வசதி வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் பஜாஜ் தனது வாகனங்களில் ஏ.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். வசதிகளை வழங்கி வருகிறது. இந்த வரிசையில் பஜாஜ் பிளாட்டினா மாடலில் முதல்முறையாக சி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டது. பிளாட்டினாவை தொடர்ந்து டிஸ்கவர் 110 மாடலில் சி.பி.எஸ். வசதி வழங்கப்பட்டிருக்கிறது.
கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் இருசக்கர வாகனங்களில் பிரேக் பயன்படுத்தும் போது இருசக்கரங்களுக்கும் சம-அளவு பிரேக்கிங் அழுத்தம் கொடுக்கப்படுவதை உறுதி செய்யும். புதிய பிரேக்கிங் வசதி தவிர டிஸ்கவர் 110 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
பஜாஜ் டிஸ்கவர் 110 சி.பி.எஸ். வேரியண்ட் ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 115.45சிசி என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 8.6 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9.81 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் பஜாஜ் டிஸ்கவர் 110 மாடல் ஹீரோ பேஷன் 110, டி.வி.எஸ். விக்டர் 110 மற்றும் ஹோன்டா சிடி110 டிரீம் டி.எல்.எக்ஸ். உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 2019 டாமினர் மோட்டார்சைக்கிள் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கியது. #Dominar2019 #Motorcycle
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விரைவில் 2019 டாமினர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. அந்த வதையில் புதிய டாமினர் 2019 மோட்டார்சைக்கிளை முன்பதிவு செய்ய ரூ.5000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களில் டாமினர் 2019 மாடல் சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இதுதவிர புதிய மோட்டார்சைக்கிள் விளம்பரமும் வெளியிடப்பட்டது.
புதிய 2019 மோட்டார்சைக்கிளின் முக்கிய அம்சங்களாக அப்சைடு-டவுன் ஃபோர்க் இருக்கிறது. கே.டி.எம். டியூக் 390 மாடலிலும் இதேபோன்ற ஃபோர்க் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய டாமினரில் இந்த அம்சத்துடன் பல்வேறு இதர அம்சங்களும் சேர்க்கப்படுகிறது.
அந்த வகையில் 2019 டாமினர் மாடலில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், மேம்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டிஸ்க் பிரேக் பொசிஷன் மற்றும் டபுள்-பேரெல் எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் புதிய டாமினர் சத்தம் வித்தியாசமானதாக இருக்கும்.
2019 பஜாஜ் டாமினர் மாடலின் என்ஜின் பி.எஸ்.-VI எமிஷன்களுக்கு உகந்ததாக இருக்கும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய மாடல் முந்தைய டாமினரை விட சதக்திவாய்ந்ததாக இருக்கும். தற்போதைய டாமினர் மாடலில் 373சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 34.5 பி.ஹெச்.பி. பவர், 35 என்.எம். டார்க் செயல்திறன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட பல்சர் 220 எஃப் மோட்டார்சைக்கிளின் விலையை அறிவித்தது. #bajaj #Pulsar
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 220 எஃப் மோட்டார்சைக்கிளின் ஏ.பி.எஸ். வெர்ஷனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
பஜாஜ் பல்சர் 220எஃப் ஏ.பி.எஸ். வெர்ஷன் வரும் வாரங்களில் வெளியாகலாம் என தெரிகிறது. இந்தியாவில் புதிய பல்சர் ஏ.பி.எஸ். வெர்ஷன் விலை ரூ.1.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது ஏ.பி.எஸ். வசதியில்லாத மாடலின் விலையை விட ரூ.7,600 வரை அதிகம் ஆகும்.
பஜாஜ் பல்சர் 220 எஃப் இந்தியாவில் பிரபலமான என்ட்ரி-லெவல் ஸ்போர்ட்ஸ் மாடலாக இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனினும், இந்த மோட்டார்சைக்கிளில் புதிய கிராஃபிக்ஸ் மற்றும் கிராஷ் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
புதிய பல்சர் மோட்டார்சைக்கிளில் 220சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.9 பி.ஹெச்.பி. பவர், 18.5 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 260 எம்.எம். டிஸ்க், பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரேக்குகளுடன் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்படுகிறது.
பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை முற்றிலும் மாற்றியமைத்து வரும் நிலையில், பல்சர் 150 ஏ.பி.எஸ். மாடலில் ட்வின் டிஸ்க் வேரியன்ட் விவரங்கள் வெளியாகியுள்ளது. #Pulsar #motorcycle
பஜாஜ் ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது வாகனங்களை முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது. ஏற்கனவே அந்நிறுவன வாகனங்களில் ஏ.பி.எஸ். மற்றும் சி.பி.எஸ். போன்ற வசதிகளை வழங்கியிருக்கிறது.
இந்நிலையில், பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 150 ஏ.பி.எஸ். மாடலின் ட்வின் டிஸ்க் வேரியன்ட் விற்பனையகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட பல்சர் மோட்டார்சைக்கிள்களை பஜாஜ் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்சர் 180, பல்சர் 220எஃப், அவெஞ்சர் க்ரூஸ் மாடல்களை போன்று பல்சர் 150 மாடலில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்படுகிறது. கூடுதலான ஏ.பி.எஸ். தவிர புதிய மோட்டார்சைக்கிளில் இருபுறங்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
புகைப்படம் நன்றி: Rushlane
பஜாஜ் பல்சர் 150 மாடலில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 14 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 13.4 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குவதோடு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
பல்சர் 150 மாடலின் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 260 எம்.எம்., பின்புறம் 230 எம்.எம். டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. புதிய ஏ.பி.எஸ். வசதி சேர்க்கப்படுவதன் மூலம் பல்சர் 150 விலை ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.
பஜாஜ் ஆட்டோ லிமிட்டெட் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. #bajaj #motorcycle
பஜாஜ் ஆட்டோ லிமிட்டெட் நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாகனங்கள் விற்பனையில் 18 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
டிசம்பர் 2017 இல் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2,92,547 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், 2018 டிசம்பரில் பஜாஜ் நிறுவனம் சுமார் 3,46,199 வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது.
டிசம்பர் 2018 இல் மட்டும் பஜாஜ் நிறுவனம் 2,98,855 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இதே போன்று டிசம்பர் 2017 இல் பஜாஜ் நிறுவனம் 2,28,762 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்தது. அந்த வகையில் டிசம்பர் 2018 இல் மட்டும் பஜாஜ் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் 31 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வர்த்தக ரீதியிலான வாகனங்கள் விற்பனையில் பஜாஜ் நிறுவனம் டிசம்பர் 2018 இல் 47,344 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. டிசம்பர் 2017 இல் பஜாஜ் நிறுவனம் 63,785 யூனிட்களை விற்பனை செய்திருந்த நிலையில், வர்த்தக வாகனங்கள் விற்பனையில் பஜாஜ் நிறுவனம் 26 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X