search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜாஜ் க்யூட்"

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மோட்டார்சைக்கிள் விலையில் நான்கு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. #BajajAuto



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனம் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ.2.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் சி.என்.ஜி. வேரியண்ட் விலை ரூ.2.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பஜாஜ் தனது க்யூட் வாகனத்தை பல்வேறு கட்டங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் குவாட்ரிசைக்கிள் என்ற பெருமையை பஜாஜ் க்யூட் பெற்றிருக்கிறது. இந்த வாகனம் ஆட்டோ மற்றும் கார்களுக்கு இடைப்பட்ட வாகனமாக இருக்கிறது.



    இந்தியாவில் ஆட்டோக்களுக்கு மாற்றாக க்யூட் வாகனம் பயன்பாட்டிற்கு வரும் என பஜாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பஜாஜ் க்யூட் வழக்கமான மூன்று சக்கர வாகனங்களை விட பெரியதாக இருக்கிறது. பல்வேறு வசதிகளுடன் பஜாஜ் க்யூட் சிறப்பான வடிவமைப்பை கொண்டிருக்கிறது.

    அந்த வகையில் புதிய வாகனத்தில் பஜாஜ் நிறுவனம் டூயல் ஹெட்லேம்ப்கள், பிளாஸ்டிக் பம்ப்பர், வைப்பர் உள்ளிட்டவற்றை வழங்கியிருக்கிறது. பஜாஜ் க்யூட் வாகனம் 12-இன்ச் ஸ்டீல் வீல்களை கொண்டிருக்கிறது. வாகனத்தின் உள்புறம் மூன்று பயணியும் ஒரு ஓட்டுனர் பயணிக்க முடியும்.



    இத்துடன் அனலாக் ஸ்பீடோமீட்டர், பேசிக் ஸ்டீரிங் வீல் மற்றும் கச்சிதமான இடவசதி கொண்டிருக்கிறது. பஜாஜ் க்யூட் பெட்ரோல் வேரியண்ட் 216சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 13 பி.ஹெச்.பி. பவர், 18.9 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    சி.என்.ஜி. வேரிண்ட் 216சிசி என்ஜின் கொண்டிருக்கிறது. எனினும் இது 10.8 பி.ஹெச்.பி. பவர், 16.1 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. பஜாஜ் க்யூட் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 35 கிலோமீட்டரும், சி.என்,.ஜி. வேரியண்ட் 43 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×