search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு கடை விற்பனை"

    தீவுத் திடலில் பட்டாசு கடைகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கையை உறுதி செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Deepavali #HighCourt

    சென்னை:

    ஐகோர்ட்டில், சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த முனியன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

    பட்டாசு விற்பனைக்காக கடைகள் டெண்டர் விடப்படும். இதற்கான வழி முறைகளை உருவாக்கி சென்னை ஐகோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

    தீவுத் திடலின் மற்றொரு பக்கம் பொருட்காட்சி, ஓட்டல்கள் போன்றவைகள் உள்ளன. இந்த இடத்திலிருந்து பட்டாசு விற்பனைக்காக ஒதுக்கப்படும் இடத்திற்கும் குறைந்தது 70 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இதை தீயணைப்பு துறை அதிகாரிகளும், சுற்றுலாத் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்யவேண்டும்.

     


     

    ஆனால், இந்த விதிமுறைகள் எதையும் ஒழுங்காக கடைபிடிக்காமல் பட்டாசு கடைக்கு சென்னை மாநகராட்சி, போலீசார், தீயணைப்பு துறை, சுற்றுலாத் துறை, மற்றும் வெடிபொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அனுமதி அளித்து வருகிறார்கள்.

    இதனால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுலாத்துறை சார்பில் கடைகள் அமைக்கப்பட உள்ளதற்கான வரைபட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மக்களின் பாதுகாப்பு தான் முதலில் முக்கியம். தீவுத் திடலில் பட்டாசு கடைகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திய பின்னர் பட்டாசு விற்பனையை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். #Deepavali #HighCourt

    ×