என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பந்தை சேதப்படுத்திய விவகாரம்
நீங்கள் தேடியது "பந்தை சேதப்படுத்திய விவகாரம்"
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக இலங்கை அணி கேப்டன் சண்டிமல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஐசிசி நிராகரித்துள்ளது. #DineshChandimal #BallTampering #ICC
பார்படோஸ்:
வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நடைபெற்றது.
2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாள் ஆட்டத்திற்கு இலங்கை வீரர்கள் களம் இறங்க தயாராக இருந்த நிலையில், போட்டி நடுவர்கள் இலங்கை நிர்வாகத்திடம் 2-வது நாள் ஆட்டத்தின்போது இலங்கை அணி (கேப்டன் சண்டிமல்) பந்தை சேதப்படுத்தியுள்ளது. இதனால் வேறு பந்துடன் நீங்கள் பந்து வீச வேண்டும் என்று கூறினார்கள்.
இதற்கு இலங்கை அணி கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் களம் இறங்க மறுத்துவிட்டனர்.
சுமார் ஒன்றரை மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் இலங்கை வீரர்கள் களம் இறங்கினார்கள். சண்டிமல் மீது பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக போட்டி நடுவர் அவருக்கு 100 சதவிகித அபாரத்துடன் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தார். இதை எதிர்த்து சண்டிமல் மேல்முறையீடு செய்தார். இதுகுறித்து விசாரணை நடத்த மைக்கேல் பெலோஃப்-ஐ ஐசிசி அறிவித்தது.
இந்நிலையில், சண்டிமலின் மேல்முறையீட்டை மைக்கேல் பெலோஃப் நிராகரித்துள்ளார். சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பின்னர் இதை அவர் தெரிவித்தார். இதனால் இன்று தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்றைய போட்டியில் சண்டிமலுக்கு பதிலாக சுரங்கா லக்மல் கேப்டனாக களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டாவது போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின்போது சுமார் ஒன்றரை மணிநேரம் தாமதமாக களமிறங்கியதற்காக சண்டிமல், பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கா, மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #DineshChandimal #BallTampering #ICC
வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய இலங்கை அணி கேப்டன் தினேஷ் சந்திமல் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering
வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது.
இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை அணி கேப்டன் சந்திமல் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆட்டம் இரண்டு மணி நேரம் தடைபட்டது. இதையடுத்து அந்த போட்டி முடிந்தபின் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையின் முடிவில் சந்திமல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 2 தகுதி நீக்க புள்ளிகள் வழங்கப்பட்டு, ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி பகல்-இரவு ஆட்டமாக விளையாடப்பட உள்ளது.
மேலும் போட்டிக்கான மொத்த ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்னாப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாத தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #WIvSL #SLvWI #DineshChandimal #BallTampering
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பின் தொடர்ந்து நான்கு நாள்கள் அழுததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார். #SteveSmith #BallTamperingScandal
சிட்னி:
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் வான்கிராப்ட் ஆகிய மூவருக்கு விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் சமுதாய சேவை செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டது. சர்வதேச போட்டியில் விளையாட தடை இருந்தாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஸ்மித் சிட்னி பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். ஆண்களின் மன ஆரோக்கியத்திற்காக நிதிதிரட்டுவதை மேம்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 'உண்மையை கூற வேண்டும் என்றால் நான் நான்கு நாட்களாக கண்ணீரில் என் நாட்களை கழித்தேன். ஒரு ஆணாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தவறல்ல.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது என் மனதை பெரிதும் பாதித்தது. இதுவரை என் வாழ்நாளில் இது போன்ற கடினமான சூழ்நிலையில் நான் இருந்ததில்லை. இரண்டு மாதங்கள் முடிந்துள்ளன. இந்த நாட்கள் நான் மீண்டும் விளையாட்டில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும். நான் விரைவில் சிறப்பாக விளையாடி மீண்டும் உயரத்தை தொடுவேன்' என கூறினார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக திகழ்ந்த ஸ்டீவ் ஸ்மித் பிரச்சனையில் சிக்கிய பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கதறி அழுதது குறிப்பிடத்தக்கது. #SteveSmith #BallTamperingScandal

×

X