என் மலர்
நீங்கள் தேடியது "பனிச்சரிவு"
- மிகப்பெரிய பனி பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
- பனிச்சரிவில் உயிரிழப்பு, காயம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இமயமலை பகுதியில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்துள்ளது.
சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார்நாத் கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக கடந்த மே மாதம் 10-ந் தேதி திறக்கப்பட்டது.
அப்போது முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேதர்நாத் கோவிலுக்கு அருகில் உள்ள காந்தி சரோவர் மலையில் நேற்று பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.
கோவிலில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள காந்தி சரோவர் மலையில் அதிகாலை 5 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. மிகப்பெரிய பனி பந்து வேகமாக கீழே சரிந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த பனிச்சரிவில் உயிரிழப்பு, காயம் மற்றும் பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதனிடையே கேதார்நாத் கோவிலில் தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்கள் பனிச்சரிவை தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அவை வைரலாகின.
- ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது
- பனிமழை மற்றும் பனிக்காற்றால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
அதே சமயம் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது. பனிமழை மற்றும் பனிக்காற்றால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்நிலையில் காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிச்சரிவு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பனிச்சரிவால் வர முடியாமல் சிக்கியவர்களை உடனடியாக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர்.
- கடந்த 13-ந்தேதி அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்தனர்.
சென்னை:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் கோவிலுக்கு புனித யாத்திரையாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர், முருகானந்தம் செல்வி, சாவித்திரி உள்பட 17 பேர் சென்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமர்நாத் அருகே ஏற்பட்ட பணிச்சரிவு காரணமாக, ஸ்ரீநகருக்கான பாதை முற்றிலும் சேதமடைந்து அங்கேயே அவர்கள் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்கள் அப்பகுதியில் இருந்து வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமர்நாத்தில் சிக்கிய தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு அழைத்து வர தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பனிச்சரிவால் வர முடியாமல் சிக்கியவர்களை உடனடியாக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து கடந்த 13-ந்தேதி அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்தனர்.
மேலும் 17 பேருக்கும் ரெயில் மூலம் சென்னை திரும்ப தமிழக அரசின் மூலம் டிக்கெட் எடுத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் ரெயில் மூலம் நேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகள் வர வேற்றனர். பின்னர் 17 பேரையும் சொந்த ஊர்களுக்கு வழியனுப்பி வைத்தனர்.
- காஷ்மீரில் இருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்த சுமார் 35 பேர் பள்ளத்தாக்கிற்கு அருகே முகாமிட்டிருந்தனர்.
- மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைக்கும் ஷௌண்டர் கணவாய் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், பகர்வால்கள் என்று அழைக்கப்படும் உள்ளூர் மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு பொருத்தமான மேய்ச்சல் நிலங்களைத் தேடி மற்றும் கடுமையான வானிலை நிலைமைகளைத் தவிர்ப்பதற்காகவும் தங்கள் மந்தைகளுடன் இடம்பெயர்கின்றனர்.
அவ்வாறு இடம்பெயர்ந்து காஷ்மீரில் இருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்த சுமார் 35 பேர் பள்ளத்தாக்கிற்கு அருகே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில், 15 கால்நடைகளும் இறந்துள்ளன.
மோசமான வானிலை காரணமாக மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நேபாளத்தின் கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது.
- பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.
காத்மண்டு:
நேபாள நாட்டில் உள்ள கர்னாலி மாகாணத்தில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் முகு மாவட்டத்தின் சியார்கு கணவாயில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர் காயம் அடைந்த 9 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
- ஆல்ப்ஸ் மலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
- இதில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாரிஸ்:
பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் ஈஸ்டர் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாவாசிகள் குவிந்திருந்தனர்.
அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
- சிக்கிமின் நாதுலா என்ற பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
- இந்தப் பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
கேங்டாங்:
சிக்கிம் மாநிலத்தின் நாதுலா என்ற பகுதியில் இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் அங்கு மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது.
தகவலறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.
இதுவரை 22 சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பனிச்சரிவால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என பேரிடர் மீட்புக்குழு தெரிவித்துள்ளது.
- காஷ்மீரில் ஸ்ரீநகர்-லே இடையே 434 கி.மீட்டர் தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையை மூடியுள்ளனர்.
- இந்திய விமான படை மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
காஷ்மீரில் ஸ்ரீநகர்-லே இடையே 434 கி.மீட்டர் தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையை மூடியுள்ளனர். பனிச்சரிவு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளுக்காக இந்த சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அந்த நெடுஞ்சாலையில் சிக்கி தவிக்க நேரிட்டது. இதையடுத்து இந்திய விமான படை மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 438 பேர் விமானப்படை விமானங்கள் மூலம் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.
ஸ்ரீநகர் பகுதியில் 260 பேர் மீட்கப்பட்டு லே பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
- ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
- இதில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
வியன்னா:
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது.
இந்நிலையில், பள்ளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
- பாரமுல்லா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- காணாமல் போன மற்ற பனிச்சறுக்கு வீரர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் குல்மார்க் பகுதியில் உள்ள பிரபல பனிச்சறுக்கு மையத்தில் கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. அஃபர்வத் சிகரத்தில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில், சில பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் வழிகாட்டிகள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்ததாகவும், அவர்கள் இருவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. காணாமல் போன மற்ற பனிச்சறுக்கு வீரர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
- திபெத் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.
- அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பீஜிங்:
சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த புதன்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
சம்பவ இடத்துக்கு மீட்பு படையினரும், அவசரகால வாகனங்களும் விரைந்தனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்நிலையில், பனிச்சரிவில் இருந்து நேற்று சில சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திபெத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- தகவலறிந்து அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
பீஜிங்:
சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது.
நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. மேலும் இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல்கள் புதன்கிழமை இரவில் தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்கு 131 மீட்பு படையினரும், 28 அவசரகால வாகனங்களும் விரைந்துள்ளனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.