என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பயிற்சி ஆட்டம்
நீங்கள் தேடியது "பயிற்சி ஆட்டம்"
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.
லண்டன்:
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கடைசி பயிற்சி போட்டி வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றுது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் 36 ரன்னும், லிவிஸ் 50 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
பொறுப்பாக ஆடிய ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 86 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஜேசன் ஹோல்டர் 47 ரன்னும், அந்த்ரே ரசல் 25 பந்தில் 54 ரன்களும் விளாச வெஸ்ட் இண்டீஸ் 49.2 ஓவரில் 421 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் பிளெண்டல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். பிளெண்டல் 106 ரன்னும், கேன் வில்லியம்சன் 85 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நியூசிலாந்து அணி 47.2 ஓவரில் 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
லண்டன்:
10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சவுதம்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இலங்கை அணியை எதிர்கொண்டது.
டாஸ் ஜெயித்த இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது. திரிமன்னே 56 ரன்னும், தனஞ்ஜெயா டி சில்வா 43 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல், நாதன் லயன், ஸ்டீவன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா, 44.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உஸ்மான் கவாஜா 89 ரன்னும், மேக்ஸ்வெல் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா, தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கை, இதில் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியை சந்தித்துள்ளது.
சவுதாம்ப்டனில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித்தின் சதத்தால் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 12 ரன்னில் வீழ்த்தியது.
சவுதாம்ப்டன்:
சவுதாம்ப்டனில் நடைபெற்ற மற்றொரு உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் இங்கிலாந்தும் மோதியது.
காயம் காரணமாக இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆடவில்லை. அவருக்கு பதில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். டாஸ்வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் 43 ரன்னும், ஷான் மார்ஷ் 30 ரன்னும், உஸ்மான் கவாஜா 31 ரன்னும் எடுத்தனர்.
ஓராண்டு தடைக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஸ்டீவன் சுமித் அபாரமாக விளையாடி சதமடித்தார். அவர் 116 ரன் எடுத்து அவுட்டானார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 64 ரன்களும், பொறுப்பு கேப்டன் ஜோஸ் பட்லர் 52 ரன்களும் எடுத்தனர்.
கடைசி வரை போராடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து ஆஸ்திரேலியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
லண்டன்:
10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், லண்டனில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணியினரின் அசத்தலான பந்து வீச்சால் ரோகித் சர்மா 2 ரன்னிலும், ஷிகர் தவான் 2 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்னில்லும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 18 ரன்னில் அவுட்டானார்.
ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும், டோனி 17 ரன்னும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னும் எடுத்து வெளியேறினர். இந்திய அணி 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.
இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஆல்- ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் இணைந்து அணியை சற்றே உயர்த்தினர். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா அரை சதமடித்தார். அவர் 54 ரன்னிலும், குல்தீப் யாதவ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் இறுதியில் இந்தியா 179 ரன்னில் ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் 71 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னும் எடுத்து அசத்தினர்.
இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.
நேற்றைய ஆட்டத்தில் டோனிக்கு பதிலாக இந்திய அணி விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார்.
லண்டனில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
லண்டன்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சவுதம்டனில் ஜூன் 5-ந் தேதி நடக்கிறது.
முன்னதாக போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. லண்டனில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. உலக கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராக பயிற்சி ஆட்டம் முக்கியம் என்பதால் இரு அணிகளும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும். இந்திய அணியில் 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரர் யார் என்பதை அறிய இந்த பயிற்சி ஆட்டம் உதவக்கூடும். இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களத்தில் இறக்க அனுமதி உண்டு.
சவுதம்டனில் இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸ்திரேலிய லெவனுடனான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கோலி, பிரித்வி ஷா, புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். #AUSvIND #ViratKohli
சிட்னி:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.
அதன்படி நேற்று சிட்னியில் தொடங்க இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய லெவன் ‘டாஸ்’ வென்று இந்திய அணியை முதலில் விளையாட அழைத்தது. பிரித்வி ஷாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் 3 ரன்னிலேயே வெளியேறினார்.
அடுத்து புஜாரா களம் வந்தார். இருவரும் ஆஸ்திரேலிய லெவன் பந்து வீச்சை விளாசி தள்ளினர். பிரித்வி ஷா 69 பந்தில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
கேப்டன் விராட்கோலி 4-வது வீரராக ஆடினார். அவரும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் எடுத்தனர்.
புஜாரா 89 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி), விராட்கோலி 87 பந்தில் 64 ரன்னும் (7பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி 204 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரகானே- விகாரி ஜோடியும் சிறப்பாக ஆடியது.
ரகானே 56 ரன் எடுத்து ரிட்டயர்ட் அவுட்டானர். விகாரி 53 ரன்னும், ரோகித்சர்மா 40 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி 92 ஓவரில் 358 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலிய லெவன் முதல் இன்னிங்சை விளையாடியது. #AUSvIND #ViratKohli

இங்கிலாந்தில் வழக்கத்திற்கு மாறாக கடும் வெப்பநிலை நிலவுவதால் இந்தியா தனது பயிற்சி ஆட்டத்தை மூன்று நாட்களாக குறைத்துள்ளது. #ENGvIND
இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. மூன்று டி20, ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துள்ள நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கு முன் இந்தியா நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று தொடங்குகிறது. இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது இந்த பயிற்சி ஆட்டம் 25-ந்தேதி (இன்று) முதல் 28-ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.
கோப்புப்படம்
இங்கிலாந்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதம் கோடைக்காலமாகும். இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக இங்கிலாந்தில் அதிக வெப்பநிலை காணப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாட இருக்கிறார்கள்.
இந்நிலையில் பயிற்சி ஆட்டத்தில் நான்கு நாட்கள் விளையாடினால் வீரர்கள் மிகவும் சோர்வடைவார்கள். இது டெஸ்ட் போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தை 3 நாட்களாக இந்தியா சுருக்கியுள்ளது. இதனால் இன்று தொடங்கும் ஆட்டம் 27-ந்தேதியுடன் முடிவடைகிறது.

உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.#FIFO2018 #Belgium #CostaRica
பிரசெல்ஸ்:
உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நாளை மறுநாள் (14-ந் தேதி) தொடங்குகிறது. ஒரு மாதம் வரை இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றன.
பிரசெல்சில் நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம் - கோஸ்டாரிகா அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பெல்ஜியம் தரப்பில் லுகாகு 2 கோலும் (42 மற்றும் 50-வது நிமிடங்கள்) மெர்டன்ஸ் (31-வது நிமிடம்), பட்சுயி (64-வது நிமிடம்) தலா 1 கோலும் அடித்தனர். கோஸ்டாரிகா தரப்பில் ரூயிஸ் (24-வது நிமிடம்) கோல் அடித்தார்.
பெல்ஜியம் கடந்த 8 போட்டியில் தோல்வியை தழுவாமல் வலிமையாக இருக்கிறது. அந்த அணி உலக கோப்பையில் ‘ஜி’ பிரிவில் உள்ளது. தோல்வியை தழுவிய கோஸ்டாரிகா ‘இ’ பிரிவில் உள்ளது.
செனகல் - தென்கொரியா மோதிய பயிற்சி ஆட்டத்தில் செனகல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இன்றைய ஆட்டங்களில் ஜப்பான் - பராகுவே, போலந்து - லிதுனியா அணிகள் மோதுகின்றன. #FIFO2018 #Belgium #CostaRica

உலக கோப்பை கால்பந்து போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் பிரேசில், ஆஸ்திரியா மோதின. இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றி பெற்றது. #FIFO2018 #Brazil #Austria
வியன்னா:
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, தனது முதலாவது லீக்கில் சுவிட்சர்லாந்தை 17-ந்தேதி சந்திக்கிறது.
இதையொட்டி பிரேசில் அணி தனது கடைசி பயிற்சி ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரியாவுடன் வியன்னா நகரில் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் வசமே பந்து அதிகமாக (65 சதவீதம்) சுற்றிக் கொண்டிருந்தது. பிரேசிலின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் கேப்ரியல் ஜீசஸ் 36-வது நிமிடத்திலும், நெய்மார் 63-வது நிமிடத்திலும், பிலிப் காட்டினோ 69-வது நிமிடத்திலும் கோல் போட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தினர். இறுதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை எளிதில் வீழ்த்தியது. நெய்மார், பிரேசில் அணிக்காக அடித்த 55-வது கோல் இதுவாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்த பிரேசில் வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ரொமாரியோவை சமன் செய்தார். பிரேசில் அணி கடைசியாக ஆடிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி உலக கோப்பை போட்டிக்குள் நுழையும் பிரேசிலுக்கு புத்துணர்ச்சியையும், கூடுதல் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, துனிசியாவை எதிர்கொண்டது. முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, முதல் பாதியில் இலக்கை நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்கவில்லை. எப்படியோ 84-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் லகோ அஸ்பாஸ் அடித்தகோலின் உதவியுடன் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. #FIFO2018 #Brazil #Austria

இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த பீபா கால்பந்து பயிற்சி ஆட்டம் காஸா வன்முறையில் 123 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence
ஜெருசலேம்:
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. அந்த வகையில் வருகிற 9-ம் தேதி இஸ்ரேல் - அர்ஜெண்டினா அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டி ஜெருசலேம் நகரில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி விளையாடுவதற்கு பாலஸ்தீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், அப்படி அர்ஜெண்டினா அணி ஜெருசலேம் நகரில் கால்பந்து விளையாடினால் அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சியின் ஜெர்சி மற்றும் படத்திற்கு தீவைக்குமாறு பாலஸ்தீன அரசியல் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து, இஸ்ரேல் உடனான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்வதாக அர்ஜெண்டினா அறிவித்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையான காஸா முனைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீன மக்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. சமீபத்தில், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 123 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ArgentinavsIsrael #FIFAWorldCup #WarmUpMatch #GazaViolence
உலக கோப்பை கால்பந்து பயிற்சி ஆட்டத்தில் செர்பியா அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிலியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
கிராஸ்:
21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 14-ந் தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் வெவ்வேறு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள மொராக்கோ அணி, சுலோவக்கியாவை சந்தித்தது. இதில் மொராக்கோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தியது. சுலோவக்கியா அணி வீரர் ஜான் கிரிக்ஸ் 59-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். மொராக்கோ அணி தரப்பில் அயூப் எல் காபி 63-வது நிமிடத்திலும், யூனஸ் பெல்ஹன்டா 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
ஆஸ்திரியாவில் உள்ள கிராஸ் நகரில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள செர்பியா, தகுதி பெறாத சிலி அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செர்பியா அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிலியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. சிலி வீரர் குல்லெர்மோ மாரிபன் 89-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். செர்பியா அணியினர் கோல் அடிக்க கிடைத்த நல்ல வாய்ப்புகளை வீணடித்தனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சர்வதேச கிரிக்கெட் அணிகள் கட்டாயமாக ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு பயிற்சிப் போட்டியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
காபுல்:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. அந்த அணி, தனது முதல் டெஸ்டில் இந்திய அணியுடன் வரும் 14-ம் தேதி மோதுகிறது. அந்தப் போட்டி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் (பொறுப்பு) அமிதாப் சவுத்ரி, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் அடிஃப் மாஷல் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப் சவுத்ரி கூறுகையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று காபூல் வந்திருப்பது மிகப்பெரிய கவுரவம். அதேபோல், அந்த அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பி.சி.சி.ஐ.க்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பைத் தவறவிட பி.சி.சி.ஐ விரும்பவில்லை. அமைதியை வலியுறுத்தும் விதமாக இருநாடுகள் இடையேயான உறவை கிரிக்கெட் விளையாட்டு மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஐ.பி.எல் தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதேபோல், ஆப்கானிஸ்தான் அணிக்கு சர்வதேச அளவில் வாய்ப்பு வழங்கும் பொருட்டு, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சர்வதேச கிரிக்கெட் அணிகள், ஆப்கானிஸ்தான் அணியுடன் பயிற்சிப் போட்டிகளில் விளையாட இருக்கின்றன, என அவர் தெரிவித்தார்.
கிரேட்டர் நொய்டா மற்றும் டேராடூன் பகுதியில் உள்ள மைதானங்களை ஆப்கானிஸ்தான் அணி சொந்த மைதானமாக பயன்படுத்திக்கொள்ள பி.சி.சி.ஐ அனுமதி அளித்ததற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்து கொண்டது. டேராடூன் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி விளையாட இருக்கிறது. #tamilnews
×

X